பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



15

லுள்ள எல்லா மொழிகளும் வளர்ச்சியில் பின் தங்கிக் கிடக் கின்றன. ஏகாதிபத்ய எதிர்ப்புணர்ச்சியும், தேச பக்தியும் நம்மிடம் முளைத்தெழ ஆரம்பித்த பிறகு தமிழும்,இந்தியும் இதர மொழிகளும் சிறிது சிறிது முன்னேறத் தொடங்கின.

எனவே, இந்த நாட்டில் எந்த மொழியும் ஆங்கிலம்போல் முன்னேற வாய்ப்பு கிடைக்கவுமில்லை ; முன்னேறவுமில்லை. தமிழைப்போல், இந்தி பழம்பெரும் இலக்கியங்களைக் கொண்டு இலக்கியம் வளர்ச்சி யடைந்த மொழி என்றும் யாரும் இந்திக்கு பெருமை குட்ட வரவில்லை.

இவ்வாறாக, இந்தக் கருத்தோட்டத்தினர் ஒரேயடியாக இந்தியை 'லம்பாடி' மொழியென்றும், மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருக்கிற குரங்குகளைப் போல் இந்தி எழுத்துக்கள் இருப்பதாகவும், இன்ன பிறவும் கூறிப் பழிப்பது, தமிழைப் பழித்தால் நமக்கு எத்தகைய ஆத்திரம் வருமோ, அத்தகைய ஆத்திரம் தாம், குற்றமற்ற இந்திப் பொதுமக்களுக்கும் ஏற்படும்.

இது தமிழ் மக்களுக்கும், இந்தி மக்களுக்கும் பரஸ்பரம் நல்லெண்ணத்தையும் ஒற்றுமையையும் வளர்க்காது. விரோத குரோதத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழர்களுக்கு லாட

மற்ற இந்த மாதிரியான எதிர்ப்பு தவிர்க்கப்படவேண்டுமென்று கம்யூனிஸ்ட் கட்சி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறது.

இரண்டாவதாக, ஆங்கிலத்தை இந்திக்கு எதிர்ப்பாக வைத்து இந்தியை எதிர்க்கும் போக்கு இந்தக் கருத்தோட்டக்காரர்கள் ஆங்கிலமே அன்றிருந்தபடி அழியாதிருக்க வேண்டுமென்று ஆரவாரம் செய்கிறார்கள். அதற்காக, ஆங்கிலம் சர்வதேச

மொழி யென்றும், நவீன கலைகளெல்லாம் ஆங்கிலத்தில் சிறக்கக் காண முடிகிறதென்றும், எனவே அதுதான் அரசாங்கப் பொது மொழியாயிருக்க எவ்வளவும் தகுதியுடையதென்றும் நியாயம் பேசுகிறார்கள்.

ஆங்கிலம் இந்தியாவுக்கு அன்னிய மொழி என்பது ஒரு தலை ஆயினும் ஆங்கிலமும் இந்திய தேசிய மொழிகளில் ஒரு

மொழியாக மாறிவிட்டது என்று கட்சி பேச இந்தக் கருத்தோட்டக்காரர்கள் தயங்கவில்லை.

இன்றைக்கு சர்வதேச மொழியென ஆங்கிலத்தை சர்வ தேசத்தார்களும் அங்கீகரித்துவிடவில்லை யென்பதையும், ஐ.நா, சபையில்கூட, ஆங்கிலத்தை மட்டும் அதிகார மொழி

ஆக்கிவிடவில்லை யென்பதையும் இவர்கள் காணத் தயாராயில்ல.

விஞ்ஞானத் துறையிலும் ஆங்கிலத்துக்கு ஈடு ஜோடாக, ஏன் ஆங்கிலத்தை மிஞ்சிக்கொண்டு ஜெர்மன் மொழியும், ரஷ்ய மொழி