பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



18

லட்சியம், இதை வர்க்க பேதமில்லாத சமுதாயத்தை உருவாக்குவது என்று உலகம் முழுவதிலும் கம்யூனிஸ்டுகள் கூறுகிறார்கள்,

வேறு எந்த நாட்டிலுமில்லாத ஜாதீய அமைப்பு இந்த

நாட்டில் மட்டும் இருக்கிறது. இந்த அமைப்பு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்த நாட்டில் அமுலாக்கிக் கொண்டிருக்கிறது. ஜாதீய முறை எப்பொழுது, ஏன், எதற்காக ஏற்பட்டது என்பது இப்போது கேள்வி அல்ல. இன்று ஜாதிமுறை நமது முன்னேற்றத்துக்குத் துணை செய்யவில்லை. முன்னேற்றத்துக்கு மூச்சினும் தேவைப்படுகிற பொதுமக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கிறது.! பிற்போக்குக்கும் சுரண்டலுக்கும் பெரிதும் பயன்படுகிறது. இந்த ஜாதீய அமைப்பிலிருந்து வளர்ந்துள்ள கொடுமைகளும், அழிம்புகளும், அடாச் செயல்களும் சொல்லும் தரத்தவை அல்ல.

சுருக்கத்தில், படுகேடு விளக்கும் இந்த ஜாதீய முறை, நம்

நாட்டில் ஜனநாயகம் தழைப்பதற்கு பெரும் முட்டுக்கட்டையாக! இருக்கிறது (கரகோஷம்).

சாதியற்ற சமுதாயமே நமது லட்சியம்

எனவே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இலட்சியம், வர்க்க

பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவதோடு, ஜாதி பேதமற்ற சமுதாயத்தையும் உருவாக்குவதாகும். "வர்க்கபேதமற்ற" என்பதில் கம்யூனிஸ்டுகளின் பார்வையில், " ஜாதிபேதமற்ற" என்பதுவும் அடங்கும். ஆயினும் பொதுமக்களுக்கு தெளிவுபடக் கூறவே, வர்க்கபேதமற்ற, ஜாதி பேதமற்ற சமுதாயம் ' என்று சந்தேகத்திற்கிடமின்றி விளக்கமாகச் சொல்லுகிறேன்.

முதலாளி எதிர்ப்புப் போராட்டம் மாதிரி, மிராசுதார்

எதிர்ப்புப் போராட்ட மாதிரி ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை நாங்கள் முக்கியப்படுத்தவில்லை யென்று குறை கூறுகிறார்கள் சிலர், இவர்கள் நிதானமாக உண்மை முழுவதையும் கணக்கிலெடுத்துப் பார்க்காமல், இவ்வாறு பேசுகிறார்கள்; அல்லது ஜாதி எதிர்ப்பு உணர்ச்சி கொண்டுள்ள பொது மக்களிடம் உண்மையைத் திரித்துக் கூற வேண்டுமென்று பேசுகிறார்கள். (கரகோஷம்) எப்படி? ஜாதி ஒழிப்புக்கு எத்தகைய நடவடிக்கைகள் வேண்டும் என்று கூறப்படுகிறது என்பதைக் கவனித்துப் பாருங்கள்! அப்பால், ஜாதி ஒழிப்புக்கான நடவடிக்கைகளில் எங்களுடைய கருத்து என்ன? செயல்பாடு என்ன என்பதைக் கவனித்துப் பாருங்கள்! உண்மை விளங்கும். '

இன்றைய சமுதாயத்தில் காணக்கிடக்கும் சகல அநீதிகளையும் பிற்போக்குகளையும் குழி தோண்டிப் புதைக்கவேண்டும்,

சகலருக்கும் சம வாய்ப்பும் சம உரிமைகளையும் நல்கும், புதிய