பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

20

போல் இன்னும் எவ்வளவோ பெயர்களை என்னால் குறிப்பிட முடியும். நேரமில்லை. (கரகோஷம்)

எங்கள் சட்ட சபைக் கட்சித் தலைவர் தோழர் கல்யாண

சுந்தரத்தையோ, எங்கள் கட்சி செயலாளர் தோழர் எம். ஆர். வெங்கட்ராமனையோபற்றிக் கேட்டு விடாதீர்கள் அவர்கள் அந்த நாளில் கல்யாணம் செய்தவர்கள். அதாவது இங்கு கம்யூனிஸ்ட் கட்சி தோன்றுவதற்கு முன்னாடியே கல்யாணம் செய்தவர்கள். அவர்களால் ஊக்கப்பட்ட, முடித்து வைக்கப்பட்ட கலப்பு மணங்கள் பலப்பல. (கரகோஷம்)

இவ்வாறு எங்கள் கட்சியின் முக்கியமானவர்கள், பொதுவாக

அவரவர் வீதாச்சாரம் கல்யாணத்தால் ஜாதி ஒழிப்பில் பங்கு செலுத்தியிருக்கிறார்கள்.

எங்கள் கட்சி தஞ்சை ஜில்லாவில் காஞ்சி வாயில் வைத்திய

நாதன் பழுத்த வைதீக சாஸ்திரியின் பிள்ளை, சேரி வாழ்ந்த ஒரு பழந்தமிழ் சகோதரியை மணம் புரிந்து கொண்டார்.(நீண்ட நேரம் கைதட்டல்) வைதீக சாஸ்திரிகள் ஒன்று திரண்டு அணிவகுத்து இந்த புரட்சிகரமான திருமணத்தை தடை செய்துவிட விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியை ஒரு அக்குகூட அசைக்கமுடியவில்லை. இது ஜாதி ஒழிப்பில் கம்யூனிஸ்ட் கட்சியின் பரம்பரை. (கரகோஷம்)

இங்கு மட்டுமல்ல, அனைத்திந்தியாவிலும் இதுதான் பரம்பரை. ஆகவே, இந்தத் துறையில் நாங்கள் யாருக்கும் இளக்க

மானவர்கள் அல்ல என்பது மட்டுமல்ல; கொஞ்சம் எடுப்பானவர்கள் என்று கூறக்கூட துணிகிறேன்,

இனி, எங்கள் குடும்ப வாழ்க்கையை வந்து பாருங்கள்? கட்சிப்

பொதுக் குடும்ப வாழ்க்கையை (கம்யூன் வாழ்க்கை) வந்து பாருங்கள்! தெரியாதவர் போல் வந்து பாருங்கள்! ஜாதி நடைமுறை இருக்கட்டும், ஜாதிப் பேச்சாவது எங்களிடையில் காணக் கிடக்கிறதா என்று பாருங்கள்! மருந்துக்கும் மறந்தேனும் எங்களிடையில் அத்தகைய உணர்ச்சியைப் பார்க்கமுடியாது.

சமீப காலத்தில் பெரியார் சில ஜாதி ஒழிப்பு மாநாடுகள்

கூட்டினார். அவற்றில் நான் கலந்து கொண்டேன். தோழர் ராம மூர்த்தி கலந்து கொண்டார். தோழர் ஏ. எஸ். கே அய்யங்கார் கலந்து கொண்டார். எங்கள் கட்சியின் சில பிரமுகர்களும் கலந்து கொண்டோம். அந்த மகாநாடுகளில் பேச்சிலோ, தீர்மானங்களிலோ ஜாதீய முறைகளோடு நாங்கள் சமரசம் பேசினோமா என்று கேளுங்கள், இதை எதற்காகக் கூறுகிறேன் தெரியுமா? மற்றவர்களோடு கூட்டணி வகுத்து ஜாதி ஒழிப்புப் போராட்டம் நடத்துவதில் நாங்கள் முன்னணியில் நின்று வந்திருக்