பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

22

பாலான, தேச பக்தியுள்ள, தேசீய ஒற்றுமையில் நாட்டமுள்ளவர்களும் ஜாதி ஒழிப்பை விரும்புகிறார்கள்,

அரசியல் கட்சிகள் மட்டுமல்ல; அரசியல் கட்சிகளில் ஈடுபடாத படிப்பாளிகளும் நல்லன்பர்களும், இன்று ஜாதி முறை,

முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை என்றும், ஜாதிமுறை தேவையில்லையென்றம், அது ஒழிக்கப்பட வேண்டுமென்றும் எண்ணுகிறார்கள். பல்வேறு ஜாதிகளையுடைய இந்த நாட்டில், பார்ப்பனரிலிருந்து ஹரிஜன்வரை எல்லா ஜாதிகளும் ஒழியவேண்டுமென்று உண்மையாகவே, உறுதியாக விரும்புகிறார்கள். இவர்களையெல்லாம் ஒன்றுபடுத்தி மயக்கத்தாலும், மௌடீகத்தாலும் ஜாதி முறைக்கு இரையாகிக் கொண்டிருக்கும் இதர பகுதி மக்களையும் இந்த முகாமில் இழுக்கத்தக்க விதத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலமே, ஜாதி முறையை நிச்சயமாக ஒழிக்கத் தகுந்த பாதையில் வெற்றிகரமாக முன்னேற முடியுமென்று நாங்கள் நம்புகிறோம். !

இந்தப் பெரும் பணியை ஆற்றுவதற்கு ஜனநாயகரீதியான

சமாதானமான மனமாற்றும் முறைதான் (The Method of Persuasion) மிகச் சிறந்த முறை என்பதையும், பலாத்கார முறை (The Method of co-hersion) தகுந்த முறை அல்ல என்பதையும் நீங்கள் என்னோடு ஒப்புக்கொள்ளுவீர்கள் என்று நம்புறேன்.

நாலுபேர் கையில் கத்தி எடுத்துக்கொண்டு அல்லது தடிகளைத்

தூக்கிக் கொண்டு, சமுதாயத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வேரோடிப் படர்ந்து கிடக்கும் ஜாதீய தீய பிரதிபலிப்புகளை, இதோ ஒழித்துக் கட்டிவிடுகிறேன் என்று கிளம்பினால் அவர்களுடைய குருட்டு ஆவேசத்தைக் கண்டு நாம் பரிதாபப்படத்தான் முடியும், மற்றபடி இந்த சில்லரை பலாத்காரத்தால் ஜாதி ஒழிப்பில் ஒரு சிற துரும்பைக்கூட அசைத்துவிட முடியும் என்று ஒரு பைத்தியக்காரனும் நினக்கமாட்டான்.

இனி பெரியார் ஜாதி ஒழிப்பைப்பற்றி சில செய்திகளை உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறேன்.

ஈ. வெ. ரா. ரஷ்யா சென்று வந்தபின்

1924-25-ல் காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஈ. வெ. ரா. "காங்கிரஸ் பார்ப்பனர் ஆதிக்கம் ஒழியவேண்டும்" என்றும், அப்பால்

"பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும்" என்றும், அப்பால், "பார்ப்பனீயம் ஒழியவேண்டும்" என்றும், அப்பால், "ஜாதி ஒழியவேண்டும்" என்றும், அப்பால் "வருணாசிரம தர்மம் ஒழிய வேண்டும்" என்றும், அப்பால் "சனாதன தர்மம் ஒழியவேண்டும்" என்றும், அப்பால் "இந்து மதம் ஒழிய வேண்டும்" என்