23
றும், அப்பால் "மதங்களே ஒழியவேண்டும்" என்றும், போகப்
போக பிரச்சாரம் செய்து கொண்டே போனார். (ஒரே சிரிப்பு.)
- பின்னர் 1932ல் ரஷ்யாவுக்குச் சென்றுவிட்டு திரும்பிவந்து,
சமதர்மப் பிரச்சாரம் நடத்தினார். ஜமீன்தார் அல்லாதார் மாநாடு, லேவாதேவீக்காரர் அல்லாதார் மாநாடு போன்ற மாநாடுகள் யெல்லாம் கூட்டினார்.
- 1934ல் என்று ஞாபகம் வடாற்காடு ஜில்லா திருப்பத்தூரில் லேவாதேவிக்காரர் அல்லாதார் மாநாடு ஒன்று நடந்தது. அந்த
மாநாட்டில் ஈ. வெ. ரா. பேசிய பேச்சு, குடியரசு பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது. குடியரசின் அந்த ஆண்டு தொகுதியை எடுத்து இன்றும் நீங்கள் பார்க்கலாம்.
- அந்தப் பேச்சில், ஜாதி ஒழிப்பைப்பற்றி அவர் என்ன கூறினார் தெரியுமா? சமதர்மம் பேசத் தொடங்கியபின் பேசத் தொடங்கியது என்பதையும், சோவியத் யூனியனுக்குச் சென்றுவிட்டு வந்த
பின் பேசிய பேச்சு அது என்பதையும் நீங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அந்தப் பேச்சில் என்ன பேசினார் தெரியுமா?
- "பார்ப்பனீயம் ஒழிய வேண்டுமென்றும், வருணாசிரம தர்மம்
ஒழிய வேண்டுமென்றும், ஜாதிகள் மதங்கள் ஒழிய வேண்டுமென்றும் எவ்வளவோ காலம் பேசிவிட்டோம். ஒரு சுக்குக்கும் பலன் ஏற்படவில்லை. இன்று அந்த ஜாதிகளையும், மதங்களையும் தாங்கி நிற்கும் சமுதாயத்தையும், அந்தச் சமுதாயத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் ஏகாதிபத்தியத்தையும் ஒழிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம்" என்று பேசினார்.
- அன்பர்களே! அன்று நான் அவரோடு சமதர்மப்பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தேன் என்பதும் திருச்சி நகரவாசிகளாகிய உங்களுக்கு நன்றாகத் தெரியும், யாரிடமாவது பழைய "குடியரசு "த் தொகுதி இருந்தால் அவசியம் படித்துப்பார்க்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன். அப்பொழுது, அன்றே ஈ. வெ. ரா. ஜாதி
ஒழிப்புக்கு என்ன பாதையைக் காட்டினார் என்பது நன்றாகப் புலப்படும். தென்னூர் கூட்டத்தில் நான்
- இல்வாறு பேசியவர், 1935-ம் ஆண்டில் வேறொரு பாதையைக் காட்டினார். இதே நகரத்தில், இன்றைய திராவிடக் கழகத்தின்
நிர்வாகத் தலைவரான எனது மதிப்பிற்குரிய நண்பர் டி. பி. வேதாசலம் அவர்கள் வீட்டில், ஒரு பார்ப்பனரல்லாதார் மாநாடு கூட்டினார்.