25
எதிர்ப்பும் ஜஸ்டிஸ் கட்சி ஆதரவும்தான். இந்தக் கூட்டத்தில்
எனக்கு ஒட்டுமில்லை ; உறவுமில்லை" என்று கூறினேன்.
- சமதர்மத்தை விட்டு, ஜஸ்டிஸ் கட்சி பக்கம் ஈ. வெ. ரா.
திரும்பிய பிறகே மேற்படி தென்னூர் கூட்டம் கூட்டப்பட்டது என்பதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
- நெடுகலும் அவருடைய போக்கு இப்படித்தான். விரும்பினால்
ராமமூர்த்தியை ஆதரிப்பார், ராஜகோபாலாச்சாரியை ஆதரிப்பார். மாவூர் சர்மாவை ஆதரிப்பார். இது ஒரு சித்தம்! (சிரிப்பு) வேறொரு பித்தம் கிளமபினால், அக்ரகாரத்தை ஒரு கை பார்ப்பேன் என்று ஆவேசம் காட்டுவார்.
- நேற்று நடந்த பொதுத்தேர்தலில், காஞ்சிபுரம் டாக்டர்
சீனிவாசனையும், ஸ்ரீரங்கம் வாசுதேவனையும், மதுரை சங்கரனையும் ஆதரித்தார், அதற்கொரு காரணம் சொன்னார். (சிரிப்பு) இன்று, ஜாதி ஒழிப்பு சாக்கில் பிராமணர்மீது பாய்கிறார். இதற்கு ஒரு காரணம் சொல்லுகிறார் :
- ஆணானப்பட்ட கௌதம புத்தன், ஜாதியை ஒழிக்க முயன்றான்,
முடியவில்லை! ஆள்வார்களும் நாயன் மார்களும் முயன்றார்கள், முடியவில்லை, நான் ஜாதியை ஒழித்துவிடுவேன் என்று இன்று ஈ. வெ. ரா. பெரியார் கையில் கத்தியை எடுக்கிறார்.
- கடந்த 30 ஆண்டுகளாக, அவர் ஜாதியை எப்படி அழித்து
வந்திருக்கிறார், அதில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை தமிழ்நாடு நன்கறியும், அவர் காட்டிய வழியால் தமிழ் நாட்டில் ஜாதீய வெறியும் ஜாதிப் பூசலும் ஒழியவில்லையென்பது மட்டுமல்ல, மாறாக, பெருகி வந்திருக்கிறது என்பதே என்னுடைய பணிவான கருத்து..
- "அன்பர்களே! ஜாதி ஒழிப்க் கொள்கையைப் பொறுத்த
மட்டில், ஒரு திட்டவட்டமான கருத்து இல்லாதவர் ஈ. வெ. ரா. என்பதை உங்களுக்கு எடுத்துக் காட்டவே, இதுவரை நான் சில கருத்துக்களைச் சொன்னேன்.
பூணூலிலும் உச்சிக்குடுவியிலுமா ஜாதி?
- இனி, இன்று அவர் நடத்தும் போராட்ட நடவடிக்கைகளை
ஒவ்வொன்றாகக் கவனிப்போம்.
- காவேரி ஆற்றங்கரையில் நாலந்து பார்ப்பனர்கள்-- இந்த
நாட்டில் ஜாதி பிறந்ததற்கும் அது வளர்ந்ததற்கும், அதன் பேரால் நடைபெறும் பலப்பல கொடுமைகளுக்கும் நேருக்கு நேர் ஒரு தொடர்பும் இல்லாத நிரபராதிகள்- தங்கள் வழக்கப்படி குளித்து, பூசை செய்து கொண்டிருந்தார்கள். சிலர், அவர்கள் வைத்திருந்த ஒரு சொம்பைத் தூக்கி காவிரி ஆற்றில் எறிந்தார்.