பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 26

கள் ; அவர்களுடைய பூணூலை அறுத்தார்கள். அவர்களுடைய உச்சிக்குடுமியைக் கத்தரித்தார்கள்; ஓடஓட துரத்தினார்கள், பெரியாரைப் பின்பற்றுகிற தி. க.வினர் எடுத்த ஜாதி ஒழிப்பு நடவடிக்கை இது.

சொம்பைத் தூக்கி காவிரி ஆற்றில் எறிந்தால் ஜாதி ஒழிந்து

விடுமா ? (ஒரே சிரிப்பு ) காவிரி ஆற்று வெள்ளம் ஒரு தனி மனிதனுடைய சொம்பை அடித்துக் கொண்டு போகிற பொழுதே, ஆயிரம் காலமாக சமுதாயத்தில் வேரூன்றிக் கிடக்கும் ஜாதிமுறையையும் அடித்துக்கொண்டுபோகும் என்று நினைக்கிறார்களா? (சிரிப்பு ).

நாலந்து ஆட்களுடைய உச்சிக்குடுமியையும் பூணலையும்

அறுத்தால், எந்த ஜாதியை எப்படி ஒழித்ததாக அர்த்தம்? (சிரிப்பு)

குடுமியைக் கத்தரித்தால் ஜாதி போய்விடுமா? குருட்டு ஆவே

சத்தால் பார்ப்பன ஓட்டல்களில் கல்லடி நடத்தினால் ஜாதிமுறையைக் கல்லால் அடித்ததாகுமா? (சிரிப்பு) ஓட்டல்களிலுள்ள 'ட்யூப் லைட்டுகளை' உடைத்து நொறுக்கினால், ஜாதிமுறையை உடைத்து நொறுக்கிவிட்டதாகக் கருதுகிறார்களா? (சிரிப்பு).

பூணூலையும், உச்சிக்குடுமியையும் அறுப்பது என்று வந்தால்,

நாடு முழுவதிலும் உள்ள பூணூல்களையும் உச்சிக்குடுமிகளையும் உடையவர்களெல்லாம் ஒருசிலர் அறுக்க அனுமதிப்பார்களா? அல்லது தாக்குதலுக்குப் பயந்து ஓடுவார்களா? எதிர்த்துத் தற்காப்புக்குத் துணியமாட்டார்களா? இப்படிச் சிலர் மனம்போன போக்கில் மற்றவர்களைத் தாக்கும்போது, பக்கத்திலிருப்போர்களெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பார்களா? அராஜகக் குழப்பத்தின் நடுவிலன்றி, தடியெடுத்தவனெல்லாம் தண்டக்காரன் என்கின்ற தாறுமாறு பிடித்தாட்டும் சூழ்நிலையிலன்றி, சில கட்டுத்திட்டத்தில் இயங்கும் சமுதாயத்தில் எந்த சர்க்காரும் இதை அனுமதித்துக்கொண்டு இருக்குமா?

சகலரின் ஒத்துழைப்பு

எந்த வகையாலும், இத்தகைய அநாகரீகச் செயல்கள் அனுமதிக்கத் தக்கதல்ல என்பதை என்னோடு நீங்களும் ஒப்புக் கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன், ஆழம் பாய்ந்த ஒரு சமுதாயக்கேட்டை வெற்றிகரமாக ஒழிக்க வேண்டுமென்றால்,சகல பகுதி மக்களின் ஒத்துழைப்போடு, சர்க்காரின் நடவடிக்கையும் தேவை என்பதையும், அதுதான் ஜனநாயகமுறை என்பதையும் நீங்கள் என்னோடு ஒப்புக்கொள்வீர்கள். இந்த பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு போன்ற செயல்கள் நாகரீகச் செயல்கள்