29
கட்சி ஒப்புக்கொள்ளுகிறது. அந்தப் பிற்போக்கு அம்சங்களை மாற்றுவதற்கு சகல ஜன நாயக சக்திகளும் ஒன்றுபட்டு நின்று போராடவேண்டும் என்பதையும் அங்கீகரிக்கிறது.
- உலகத்தில் எந்த நாட்டு அரசியல் சட்டத்திலும் இல்லாத
அளவு இந்திய அரசியல் சட்டம், ஜனாதிபதிக்கு சர்வாதிகாரம் அளிக்கிறது. ஜனாதிபதி பிடித்து வைக்கிற பிள்ளையார்கள் தான் கவர்னர்கள். இந்தக் கவர்னர்கள், வைத்தால் குடுமி, சிரைத்தால் மொட்டை என்று சொல்லுவதுபோல், விரும்பினால் சட்ட சபையை விட்டு வைக்கலாம்; பிடிக்காவிட்டால் ஜனப் பிரதிநிதி சபையைக் கலைத்து விடுவதற்கும் உரிமை உண்டு.
- மற்றொன்று, எந்த நகரத்திலேனும் மக்கள் தங்கள் பிரச்சினைக்கான போராட்டத்தை நடத்துகிறபொழுது, ஜனாதிபதி
விரும்பினால் அதற்குக் கலகம் என்று பெயர் சூட்டி பாராளுமன்ற அனுமதியின்றியே, ஆகாய விமானத்தின் மூலம் குண்டுமாரி பொழிந்து அதை நசுக்கிவிட அவருக்கு அதிகாரம் அரசியல் சட்டம் அளிக்கிறது. இத்யாதி இத்யாதி எத்தனையோ பயங்கரமான அதிகாரங்களை அரசியல் சட்டம் ஜனாதிபதியிடம் குவித்து வைத்திருக்கிறது.
- ஜனநாயக விரோதமான ஜனாதிபதியின் இந்த சர்வாதிகாரம் ஒழிக்கப்படவேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்ப முதலே
போராடி வருகிறது.
- சட்டத்திலுள்ள இந்த அம்சத்தையா ஈ. வெ. ரா. பெரியார்
எதிர்க்கிறார்? இல்லை.
- அரசியல் சட்டத்தில் வரும் விஷயங்கள் மூன்று வகையானது.
- 1. யூனியன் சர்க்காரை ஒட்டிய விஷயம்,
- 2. யூனியன் சர்க்காரையும் ராஜ்ய சர்க்கார்களையும் ஒட்டிய
விஷயம்.
- 3. ராஜ்ய சர்க்காரை மட்டும் ஒட்டிய விஷயம்,
- யூனியன் சர்க்கார் விஷயத்தில் ராஜ்ய சர்க்கார் தலையிட முடியாது. யூனியன் சர்க்காரும் ராஜ்ய சர்க்காரும் சம்பந்தப்பட்ட
விஷயத்தில் யூனியன் சர்க்கார் அனுமதியின்றி ராஜ்ய சர்க்கார் ஒரு துரும்பையும் அசைக்க முடியாது.
- ராஜ்ய சர்க்காரின் பிரித்தாளும் விஷயங்களான போலீஸ்,
கல்வி, விவசாயம் போன்ற விஷயங்களிலும், மத்திய சர்க்காருடைய அனுமதி பெற்றே காரியங்களைச் செய்யவேண்டிய நிலைமை சட்டப்படி இருக்கிறது.
- ஐ.சி.எஸ். அதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஐ.பி. எஸ். அதிகாரிகள், ராஜ்ய சர்க்காருக்கு உட்பட்டவர்களாயினும்