28
ளின் ஆதரவு கிடைக்க முடியாது. அதே பொழுதில், அவர்கள் ஆதரவளிக்காது கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.
- அக்கிரமமான பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு
போன்ற அநாகரீக வெறிச் செயல்களை எதிர்க்கவும் செய்வார்கள். இதனால் ஜாதி ஒழிப்பு என்று சொல்லிக்கொண்டு ஈ. வெ. ரா. தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டமுறை ஜாதி ஒழிப்புக்குத் தேவையான ஒற்றுமையைத் திரட்டுவதில் வெற்றி பெறாது. மாறாகமோதுதல்களையே விளைவிக்கும்.
- எனவே, இந்த வெறிச் செயல்கள் ஜாதி ஒழிப்புக்கு
உதவாது, ஜாதீயச் சண்டைகளுக்கே தூப தீபம் போடும்.
- இந்த இடத்தில் வேறொரு உண்மையையும் கூறிவிட விரும்புகிறேன். பூணூலை அறு, உச்சிக் குடுமியைக் கத்தரி, பீமநகரில்
எழுதியிருப்பது போல் இரத்தம் ஒழுகும்படி உச்சிக் குடுமியைக் கத்தரிப்பதாய் படம் தீட்டு, என்று ஈ. வெ. ரா. கூறினார் என்றோ அல்லது பக்கத்தில் நின்றுகொண்டு தூண்டிவிட்டார் என்றோ நான் சொல்ல வரவில்லை, அவர் பேசி வருகிற பேச்சுக்கும், அவருடைய பத்திரிகையான விடுதலையில் எழுதிவரும் எழுத்துக்கும் இந்த மாதிரி வெறிச் செயல்களில் சில பல வாலிபர்கள் ஈடுபடுவதில் பொறுப்புண்டு என்பதை மறுக்க முடியாது.
- திராவிடக் கழகத் தலைமையின் பேச்சும், எழுத்தும், ஏற்றுகிற
கொடிய துவேஷத்தின் விளைவுதான் இத்தகைய, நல்ல மனிதர் யாரும் விரும்பத்தகாத அநாகரீக வெறிச் செயல்களுக்கு காரணம் என்பதை தமிழ் மக்கள் உணர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
- இதோடு மட்டுமல்ல ; ஐாதி ஒழிப்புக்கு வேறு சில நட வடிக்கைகளையும் ஈ. வெ. ரா. பெரியார் காட்டியுள்ளார்.
- 1. இந்திய அரசியல் சட்டப் புத்தகத்தை எரித்தல்,
- 2. காந்தியடிகள் பட எரிப்பு.
- 3. தேசீயக் கொடி எரிப்பு,
இவற்றை ஒவ்வொன்றாக எடுத்து, இவை எப்படி ஜாதியை ஒழிக்கும் என்பதை அலசிப் பார்ப்போம் என்று பலத்த கரகோஷத்திற்கிடையே ஜீவா பேசினார். அரசியல் சட்டத்தை எரிப்பதால் ஜாதி ஒழியுமா?
- "அன்பர்களே! அரசியல் சட்டத்தில் அகற்றவேண்டிய பல
பிற்போக்கு அம்சங்கள் இருக்கின்றன என்பதை கம்யூனிஸ்ட்