பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

34

இந்த எதிர்ப்பை அடி மடியில் வாங்கிக் கட்டிக்கொண்டும்,

ஜாதி ஒழிப்பு நடத்த வேண்டிய சூழ்நிலை நாட்டில் இருக்கிறதா? இவ்வாறு எல்லோருடைய எதிர்ப்பையும் அநாவசியமாகப் பெற்றுக் கொண்டு ஜாதி ஒழிப்பில் குதிக்கிறவர்கள் உண்மையில் ஜாதி ஒழிப்புக்காக இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள் என்று பொறுப்புணர்ச்சியும் நிதான புத்தியும் உடையவர்கள் எண்ண முடியுமா?

மேலும், ஒரு நல்ல மனிதன் ஒரு நாகரீக மனிதன், ஒரு ஜன நாயகவாதி, ஒரு சமாதான விரும்பி, காந்தி படம் எரிப்பதை கண்ணால் பார்த்துக்கொண்டே வாளாயிருக்க முடியுமா?
ஆகவே, பெரியாரின் காந்தி பட எரிப்பு திருப்பணி, சகல

பகுதி மக்களையும் எதிர்ப்புக் குரல் எழுப்பி நிர்ப்பந்திக்குமேயன்றி ஜாதியை ஒழிக்க, தூசுகூட துணை போகாது என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் அழுத்தம் திருத்தமான கருத்து. (பலத்த கரகோஷம்)

தேசீயக் கொடி எரிப்பு

அடுத்தது தேசியக் கொடி எரிப்பு. தேசியக் கொடி ஒருவரின் சொத்தோ அல்லது ஒரு கட்சியின் சொத்தோ அல்ல. நமது தேசீய கௌரவத்தின் அறிகுறி அது.

தேசியக் கொடியின் கீழ், இன்று நாட்டை ஆளுவோர், பல

தவறுகள் இழைக்கலாம். தேசியக் கொடியின் கீழ் ஆளவந்தார் எடுக்க வேண்டிய, எடுக்க முடிந்த பல நடவடிக்கைகளை எடுக்காமல் நாகரீகத்தைப் பழிக்கும் விதத்தில் பல ஜாதீயக் கொடுமைகள் இன்னும் நீடிக்கலாம். இதற்கு தேசியக் கொடி அல்ல பொறுப்பாளி. ஆட்சி பீடத்திலிருப்பவர்களும் அவர்கள் கடைப்பிடிக்கும் பிற்போக்கான கொள்கைகளுமே பொறுப்பாளிகள். இதை நாம் உணர்ந்தால், ஆட்சியில் மாற்றத்தை, ஆள்வோர்களின் மாற்றத்தைக் கொண்டுவர முற்படுவோமேயன்றி தேசீயக் கொடியை எரிக்கும் வெறியாட்டத்துக்கு தேவை ஏற்படாது.

தேசீயக்கொடி புனிதமானது. நமது நேர்மையான தேச

பக்தியை விடுதலை இலட்சியத்தை, இன்னபிற சீரிய புத்துணர்ச்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவது. கட்சி பேதங்களைத் தாண்டி, இந்நாட்டிலுள்ள எல்லா தேச பக்தர்களும் அவரவர் விகிதாசாரப் படி உடல், பொருள், ஆவி அனைத்தையும் தத்தம்செய்து உருவாக்கியது. ஏன், ஒரு காலத்தில், ஈ. வெ. ரா.வும் நேர்மையான உணர்ச்சியுடன் இந்தக் கொடியின் உருவாக்கத்திற்குப் பங்கு செலுத்தியிருக்கிறார் என்பது நாம் அறியாததல்ல.

இத்தகைய பொன்னான கொடியை எரித்து ஜாதியை ஒழிக்க முற்படுகிறேன் என்பது எதையோ நினைத்துக்கொண்டு எதையோ