பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



39
எனவே, நாட்டின் வளர்ச்சியிலும், ஜனநாயக வளர்ச்சியிலும்

ஜாதிக் கொடுமைகளற்ற சமுதாய வாழ்வில் அக்கறை கொண்டுள்ள சகல அரசியல் கட்சிகளும், சகல ஸ்தாபனங்களும், ஜாதி வெறிச் செயல்களில் ஈடுபடும் போக்கை எதிர்த்து மக்களைத் திரட்ட வேண்டும் என்று எங்கள் மகாநாட்டுத் தீர்மானம் பணிவன்போடு கேட்டுக்கொள்ளுகிறது.

ஜாதி உணர்ச்சியினால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும்

ஏற்படும் தீங்குகளை தெள்ளத் தெளிவாக உணர்த்தி, அதை அறவே அகற்றப் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்றும், ஜாதிக் கொடுமைகள் எந்த உருவத்தில் தலைகாட்டினாலும் அவற்றை விட்டு வைக்காமல் இடைவிடாது எதிர்த்துப் போராட வேண்டுமென்றும், இவை கம்யூனிஸ்டுகளின் கடமைகள் என்றும் எங்கள் மாநாட்டுத் தீர்மானம் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறது.

இத்தகைய கடமைகளை கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் நிறைவேற்ற

முயற்சி செய்வதில், பொதுமக்களாகிய நீங்கள், பரிபூரண ஆதரவு தரவேண்டுமென்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்",

"அன்பர்களே! நான் நீண்ட நேரம் பேசிவிட்டேன்.

இனியும் நான் பேசிக்கொண்டிருக்க இந்தக் கூட்டம் இடம் தராது. வெகு சீக்கிரத்தில் எனது பேச்சை முடித்துவிடுவேன்.

உலகம் நிலைகுத்திய கண்களோடு, கூர்ந்து கவனிக்கப்படுவதும்,

கம்யூனிஸ்டுத் தலைமையில் வளர்ந்து வருவதுமான கேரள ஜனநாயகத்தைப் பற்றியும் கொஞ்சம் இந்தக் கூட்டத்தில் பேச விரும்பினேன் நேரமில்லை,

தோழர்கள் எம். ஆர். வெங்கட்ராமனும், மோகன் குமார

மங்கலமும் முறையே அவர்களுடைய பேச்சில் கேரளத்தின் வெற்றிச் சாதனைகளைப் பற்றிப் பேசியதை நீங்கள் கேட்டீர்கள். எனக்குப் பின்னால் தலைவர், ஒருக்கால் அதைப் பற்றியும் இதர விஷயங்களைப் பற்றியும் பேசக்கூடும் என்று நினைக்கிறேன்.

ஆகவே ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும் சில வார்த்தைகள்

பேசிவிட்டு எனது பேச்சை முடித்துக்கொள்வேன்,

ஜாதி ஒழிப்பைப்பற்றிக் குறிப்பிடுகிற பொழுது, குறிப்பாகத்

தாழ்த்தப்பட்ட மக்களைப்பற்றிக் குறிப்பிடாதிருக்க முடியாது என்பது என் கருத்து.

தாழ்த்தப்பட்ட மக்களும் வர்க்க ஸ்தாபனங்களும்
ஜாதி ஒழிப்புத் துறையில் அக்கறை காட்டி கலப்பு மணங்கள்

புரிய, சமபந்தி போஜனங்கள் நடத்த பலரும், பல கட்சிகளும் நடவடிக்கைகள் எடுக்க முன்வந்திருக்கலாம் என்பதை நான் ஆட்சேபிக்கவில்லை, அரிஜன சேவா சங்கம் போன்ற ஸ்தாபனங்