பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 ஜாதி ரோஜா

பெருக்குடன் பேசி வரவேற்றாள். தன் அத்தானுடைய இதயம் அறிந்து, செந்தாமரையின் மனத்தைப் படித்துக்கொண்டு, அவ்விரு. வரையும் தம்பதியாக்கத் திட்டமிட்டாள். அதே சமயம், அழகேச னுக்கு வந்திருந்த அந்தக் கடிதத்திலே முரளி என்று பெயரிட்டிருந் த்து நினைவில் மிதந்தது. அத்தான், நீங்களா இவருக்கு லெட்டர் போட்டிங்க ? என்று கேட்க வாயைத் தூக்கிளுள். ஆனல் முர வளியோ, பேயடித்தவன் போல பொலிவிழந்து காணப்பட்டான். குடலைப் புரட்டும் ஏதோ ஒரு வாடையையும் அவள் நுகர்ந்தாள். அேழகி, பத்து ரூபாய் மாத்திரம் கொடுப்பாயா?... அவசரமாகத் தேவைப்படுது,’ என்றான் முரளி. அவள் கொடுத்தாள். அவன் நிற்கவில்லை. மறைந்துவிட்டான். இந்த லட்சணத்தில் பேச நாழி ஏது? ஆளுல், அவன் விடைபெற்றுச் சென்றதும், சிவப்புத் தொப் பிகள் சில வட்டமிட்டதை அறிந்தபோது, முரளியும் ஒரு புதிராகவே தோன்றினுன். பாவம், அழகிக்கு ஓர் உண்மையைச் செந்தாமரை தெரிவிக்கவில்லை. ஒரு நாள், தாமரை, தன் தோழிக்கு நல்வாழ்வு தர அழகேசன் பவனத்திற்கு வந்தபோது, முரளி அங்கே ஓடிவந்து ஒண்டிக் கொண்டதையும், பிறகு போலீஸ் ஜவான்கள் இந்த மைனரைத் தேடி வந்ததையும், அவள் இல்லையென்று சொன்ன தையும் அழகியிடம் அம்பலப்படுத்தாமல் இருந்ததுதான் அந்த _. - .

படப் பிடிப்பிற்குத் தயாராகும் கதாநாயகி ஒளி விளக்குகளின் முன்பாக நிற்கும்போது, அவளுடைய சுந்தரவதனம் அழகு ஜோதி யாக மின்னுவது இயற்கை. அம்மாதிரியே நிலவுப் பெண் காணப்

- - - - - - - - - . iT Rif

செந்தாமரை அழகியிடமிருந்து விடை பெற்றுச் சென்றாள்.

மேஜை விளக்கை ஏற்றிவிட்டு நாற்காலியில் உட்கார்ந்தாள் அழகி. அன்று படித்த கடிதம் அவள் பார்வையில் ஏழாவது தவனே யாகப் பதிவானது. வியாழக்கிழமை ஹோட்டல் பூலோக சுவர்க் கத்திற்கு இவர் போயிருப்பாரா? ஊருக்குப் போன மனிதரைக் காணவில்லையே?. வெளியூருக்குத்தான் போளுரா, அல்லது பூலோக சொர்க்கத்திலேயே ஆழ்ந்து போய் விட்டாரா ?

என்னவோ, சென்ற சில காம்களாக அவளுக்கு இல்லாததும் யெல்லாததுமான நினைவுகள் எழுந்தன.

அம்மா, பூங்குழலியாம்; உங்களைப் பார்க்க வேணு மாம்.’’ என்று தூது வந்தாள் வள்ளி,

பூங்குழலியை அவள் சிலவாரங்களுக்கு முன்னர் சந்தித்தாள். அவள் இப்போது குமரியல்ல; திருமணமானவள். இரட்டை உயிர்களை ஒருயிராக்கிக் கொண்டு விளங்குபவள்.