பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீள்ங்கல்யத்தின் உயிர் 109.

  • அல்ல, உன்னுடையவாழ்க்கையில் வசந்தம் பண்பாடவேண் டுமே யென்பதைப்பற்றிக் குறிப்பிடுகிறேன்.’

‘நீ சற்றுமுன் சொன்னயே, மறந்துபோன ஒரு விஷயமென்ப தாக அதையே திருப்பி அனுப்புகிறேன் உன்னிடம். அது ஏன் னுடைய மறந்த தகவல் மட்டுமல்ல ; எப்போதோ மறைந்துவிட்ட சம்பவங் கூட 1’’

‘அப்படியென்றால், உன்னுடைய எதிர்காலம்...?” ‘முதலில் உன்னுடைய எதிர்காலத்தைக் கணி, தாமரை !” ‘குதர்க்கம் பேசுகிறாய் !’ - “எங்களுக்கு-அதாவது கதை எழுதுபவர்களுக்குக் குதர்க் கம் தேவை. ஆனால், நோய் தீர்க்கும் மருந்து ,ே உனக்கு அது ஒப்பமாட்டாது !’

வேண்டாததைச் சொல்கிறாய் ‘ :"நீயோ வேண்டாததைச் செய்கிருயே, செந்தாமரை !’ “ உன் வாழ்க்கையை நிரந்தரமான சோக நாடகமாக மாற்றிக் கொள்ளப் போகிருயா, அழகி ?”

‘உன் நாடகம் இன்பியலாக அமையட்டும். அதுவே எனக்குச் சந்தோஷம் தரும், தாமரை.” -

‘பெண்களுக்குத் தன்னலம் அதிகமென்று பேசுவார்கள். நீ விலக்கு விதி போலும் !’ - -

இயற்கையின் பரிசோதனைக் கூடமாக வாய்த்திருந்த அமுதச் சூழலிலே, இருவரும் பேச்சைத் தொடராமல்-தொடர முடியாமல், ஒருவரை யோருவர் பார்த்தது பார்த்தபடியே இருந்தார்கள்.

மறுகணம், அழகியின் கற்பனையில் காட்சி ஒன்று விரிந்தது. தன் அத்தான் முரளியும் தன் சிநேகிதி செந்தாமரையும். கையோடு கை இணைத்து, நெஞ்சோடு நெஞ்சு பொருத்தி, உறவோடு உறவு. கூட்டிக் காட்டிய திருமணக் கோலம் அது. என்னுடைய சொந்தக் கனவுதான் பலிக்கவில்லை. எனக்காக இருந்த இடத்தை என் தோழிக்குக் கொடுப்பதில் எனக்குப் பெருன்ம் மட்டுமல்ல, கிம்மதி யும் உண்டு. மண்ணும் விண்ணும் மலிந்திருப்போனே! இந்த ஒன் றையாகிலும் ஈடேற்ச் செய்யமாட்டாயா ?’ என்ற அழகான சிந்தனை யும் அவளைத் தன்வயப்படுத்தியது. -

போன வாரம், அழகேசன் பவனத்தில் அவள் முரளியைக் கண்டாளல்லவா ? எதிர்பாராத அவனுடைய வருகையில்ை அவள் அடைந்த அதிர்ச்சி மாறியவுடன், அத்தான்’ என்று அன்புப்