பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 ஜாதி ரோஜா

கடக்கமுடிதாத ஒன்றை-என்வரை நடக்க முடியாத ஒன்றை அல்ல, என்வரை நடந்துகாட்டாத ஒன்றைப்பற்றி வேதாந்தம் பேசுகிறது இந்தக் குறுந்தொகை 1 என்று ஆத்திரப்பட்ட அவள், அதைத் தூர வீசிள்ை.

கண்ணுடி அவள் பிம்பத்தைக் காட்டிற்று. ஒரு நகை இல்லை. அழகேசன் அவளுக்குத் திருமணப்பரிசாக அனுப்பிய வைரககை கள் பெட்டியில் உறங்கின. தவறிப்போன ஒற்றை வளையலின் ஞாய கம் வந்தது. ஒருமுறை அழகேசன் கடையில் அவள் தன் தோழி யுடன் திரை மறைவில் செல்லவேண்டிய சங்கடமான நிலை உரு வானபோது, அது கழுவி விழுந்து, இப்போது உரிமைக்காரனிடம் சேர்ந்திருப்பதை அவள் அறியமாட்டாள் -பெருமூச்சு!

நினைவுக் குறிப்புப் புத்தகம் வந்தது, விடிந்ததும், கஜேந்திர இனச் சந்திக்க வேண்டுமென்று சொன்னது அது. *

பூங்குழலி படியிறங்கிப் பிரிந்தாள். படி ஏறிவந்த டிரைவர், :அம்மா, நம்ப சின்ன எஜமானரை மவுண்ட் ரோட்டிலே ஏதோ ஹோட்டலிலே யாரோ பிடிச்சு வச்சிருக்காங்களாம்...’ என்றான்,

அபலையின் கழுத்தில் தொங்கிய மாங்கல்யம், விதி'யின் கழு மரத்திலே ஊசலாடிக்கொண்டிருந்தது. .

அழகி, மாமா, மாமா !” என்று அலறிப் புடைத்து ஒடினுள் t