பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அழகி ! இதோ, எரிமலை...புயல்...பூகம்பம் -

மனம் ஒரு திே மன்றம். நீதிபதி இந்த மனச்சாட்சி. இதயத் திற்குள்ளே ஓர் இதயம் உண்டு. இதற்கு மாத்திரம் நாக்குகள் இரண்டு. நீதி, அநீதிகளுக்கு வழக்காடவேண்டாமா ? விந்தை மிகுந்ததுதான் இந்த நீதிபுன்றம்...!

மனச்சாட்சியின் தீர்ப்புக்குக் காத்திருந்தாள் அழகி. உயிர்த் துடிப்பு நின்று விடுமோ என்று ஒரு பயம் ஏற்பட்டது. இதயம் பூராவுமே பாழ் வெளியாகி விட்டதோ என்று ஒரு சந்தேகம் எழுந் தது. இனம் பகுத்துப் பார்க்க முடியாத வேதனே அவளை ஆட்டிப் படைத்து அலைக்கழித்துக் கொண்டிருந்தது. ‘மாமா...... மாமா!’ என்று அலறிப் புடைத்துக்கொண்டு மாடிப்படியிலிருந்து கீழ்த்தளத் துக்கு ஓடி வந்தவள் பேய்பிடித்தவள்போல அப்படியே நின்று விட் டாள். கடைசிப்படி தாண்டினுல், நடை. அவளை வரவேற்கத் தவியாய்த் தவித்துக்கொண்டிருந்தது அது. ஆனுல், அவள் தவித்த தவிப்பை அது அறிய முடியாது. முடியவே முடியாது- நிச்சய மாகத்தான் ! .* - -

இமைகளின் சங்கமத்தலத்தில் கண்னனிர் ஈரம் பாய்ந்திருந்தது. தேய்ந்த லாடங்களாயின, ஒரு சில நிமிஷங்கள். அழகி அப்பொழுதுதான் தன்வயப்பட்டாள். கண்களை மூடி மூடித் திறந்தாள். இதயத்தின் இதயம் திறந்து திறந்து மூடிக்கொண் ட்து. எண்ணினுள் எண்ணிஞ்ள்; மூளை நரம்புகள் அறுந்தன. உதி ரம் சொட்டியது. மனத்தில் அச்சடிக்கப்பட்ட கடுதாசி ஒன்று கிடப் பதைக் கவனித்தாள். அவள். . . .

தீர்ப்பு கிடைத்தது : - “அழகி, ஒடு...உன் மாமாவிடம் சேதியைச் சொல். உன் கணவனைக் கர்ப்பாற்று...இதுவே உன்னுடைய கடமை. ஒடு, அழகி, ஒடு 1.சீக்கிரம் ஒடு ‘ - ‘. . . .

அழகி, தெய்வமே...!’ என்று விம்மியவாறு, கடைசிப் படியை *யும் கடந்து, கூடத்தை அடைந்து நாற்காலியில் உட்கார்ந்தாள். வெங் காயவெடியை யாரோ தன் தலையில் வீசிவிட்டமாத்ரி அவள் துடி துடித்தாள். கணவர்...என் கணவர் !...” என்று பித்துப்பிடித்தவள் போன்று தனக்குத் தானே பிதற்றினுள். கடமை...என் கடமை r