பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகி! இதோ, எரிமலை... புயல்... பூகம்பம்! 115

அழகி. அன்புக்கு அப்பாற்பட்டவளாக மாறியவள், இப்போது கடமைக்கும் அப்பாற்பட்ட வளாக மாறிவிட்டாள்.

“...என் கணவராமே ? உடல் திண்டித் தாலி பூட்டி, ஆணுல்: நெஞ்சைச்தீண்ட முடியாதவராயிற்றே அந்த மகராஜன். அவருக்கு உதவுவதுதான் என் கடமையாமே ? மனம் கணத்துக்கு கனம் மாறும் ஒரு பச்சோந்தி , மனச்சாட்சி, பலூன் கண்ட இடத்தில் விம் மும் கைக்குழந்தை. இவை இரண்டும் என்னை ஏவுவதா ?...அழ கேசன் கட்டிய தாலியை நான் ஏந்திக்கொண்டிருக்கும் தோஷத்திற் குத்தான் நான் கண்ணிரைப் பரிகாரமாக்கிக் கொண்டிருக்கிறேன். அது போதாதா ? மாமாவிடம் நான் ஏன் இதைப் போய்ச்சொல்ல வேண்டும் ? அவர்தான் அழகேசன்பேரில் ஆத்திரமாக இருக்கி ருரே ?...அழகேசனின் நாடகத்தைவேறு புரிந்துகொண்டதாகவும் சொன்னரே ? விடியட்டும் பொழுது...! என்று மனம் குழம்பினுள் அவள். -

அழகி எங்கோ மிதந்தாள். உலகங்கள் ஒவ்வொன் ருக வழி விட்டன. உயர உயரப் பறந்தது பருந்து , உச்சி முகட்டில் நிலைத் தது; எங்கும் இன்பம் ; கானும் பொருளில் எல்லாம் ஆனந்தம் நோக்கும் திசை முழுதும் கள் வெறியின் ஆரவாரம்.

அழகியின் மார்பகம் ஏறியது ; இறங்கியது. சுட்டெரித்த விண்மதி தட்டி அழைத்தது. போதையை போதத்திலே ஒளித்து வைத்து, தூய மதுக்குடம் ஏந்தி நின்ற புத்தம் புதிய ரோஜாப்பூ நிலவைச் சுட்டெரித்துச் சபித். துக் கொண்டிருந்தது. -

கண்களைத் துடைத்தபடி அழகி எழுந்தாள். கூடத்துக்கு. நடந்தாள். . . . . . . . . . -

சோமநாதன் எதிர்ப்பட்டார். * என்ன அம்மா, சாப்பிடவில்லை?” என்று விசாரித்தார்.

உங்களுக்குச் சாப்பாடு பரிமாறத்தான் வந்தேன்...’ என். ருள் அழகி. . . . . .

என்னைப் பற்றியே நாளெல்லாம் கவலைப்பட்டுக் கொண் டிருக்கிருயே, அழகி ? உன்னைப் பற்றியே நீ கவலைப்பட மாட் டிேன் என்கிருயே ? ? என்று கேட்டார் பெரியவர். - - * என்னைப் பற்றித்தான் நீங்கள் விடிைக்கு விளுடி கவலைப்படு: கிறீர்களே, மாமா ? அது போதாதா?’ என்று சிரித்தாள் சின்ன

வள்-அழகி -