பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 ஜாதி ரோஜா

முககைப்புக்கு வேண்டுமானல், அல்லது ஒப்பனைக்கு வேண்டுமானுல் நீ இப்படி என்னே உயர்த்திப் பேசலாம். ஆணுல் நான் பாவி அழகி நான் மகாபாவி...கொடும்பாவி என்று விம்மி ஞர் சோமநாதன்.

மாமா, அப்படியெல்லாம் சொல்லாதிங்க. நீங்க பெரியவங்க. என் அதிர்ஷ்டம் இப்படி... நீங்க என்ன செய்விங்க ?. நீங்க எதுக்கு அழனும். ? என் தந்தை ம்ாதிரி யிருக்கிற நீங்க தானே எனக்கு இப்போது ஆதரவு.! கண்ணைத் துடைச்சிக்கிட்டு வாங்க, சாப்பிடலாம். அதோ, வள்ளி வெள்ளித் தட்டைக் கழுவி வந்து விட்டாள்...” என்று நிதானம் பிறழாத தொனியில் வார்த்தைகளை வெளியேற்றினுள் அவள். - பெரியவர் அவளை ஏற இறங்கப் பார்த்தார். பிறகு, எனக்கு சாப்பாடு வேண்டாம், அழகி ’ என்று தீர்மானமாகச் சொன்னுர்.

மின்னல் துவகளும் நேரத்திற்குள் அழகி துவண்ட கொடி பானுள். மாமா, இப்போதுதான் உடம்பு கொஞ்சம் தேறி வருது.

இராச் சாப்பாட்டை தள்ளக் கூடாதுன்னு நீங்களே எனக்குப் புத்தி, சொல்லுவீங்களே ?...வாங்க, தக்காளி ரசம் இருக்கு. ரசஞ் சாகமாச்சும் சாப்பிடுங்க... அப்புறம் பால் சாப்பிட்டு நிம்மதியாகப் படுத்துக் கொள்ளுங்கள்...” என்று மறுபடியும் கெஞ்சிள்ை.

விரக்தியுடன் சிரித்தார்-அழகேசன் ஸில்க் எம்போரியத்தின் சொந்தக்காரர். உன்னுடைய நிம்மதியைப் பறித்துக் கொண்ட என்னே நிம்மதியாகத் துங்கச் சொல்லுகிருயா ?. வேடிக்கையான விண்ணப்பம்தான். அழகி, என்னைத் தயவு பண்ணி மன்னித்து விடு...’ என்று அவளே நெருங்கி, அவளது கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினர். -

  • மாமா, நான் உங்கள் மருமகளாயிற்றே ? நான் மன்னிப் யதா ?. நீங்கள் ஒன்றும் தவறு செய்யவில்லையே ?...’

எங்கோ பிரகாசிக்க வேண்டிய குலச் சுடரை இந்த வெறும் வீட்டில் அடைத்து வைத்து விட்டேனே, இந்தப் பாவத்துக்கு எனக்கு ஏமுேழு பிறப்புக்கும் மன்னிப்பு கிடைக்காதே அம்மா ! உன் கல்யாணத்தை முடிவு செய்தவன் அழகேசன். அந்தச் சமயம் பார்த்து எனக்கு பாழும் காய்ச்சல் வந்தது. சாகப் பிழைக்கக் கிடந்தேன். இல்லையென்றால், நான் உன் சம்மதத்தைக் கேட்காமல் இருந்திருப்பேனு ? அழகேசனுடைய உண்மை சொருபத்தை அவனைப் பெற்ற அப்பனை என்னுலேயே புரிந்துகொள்ள முடி யாழல் போய் விட்டதே? இந்தக் கல்யாணம் உன் அப்பாவின் உயிரைக் குடித்து, உன் உயின்ரயும் அணு அனுவாகச் சாகடித்துக் கொண்டிருக்குமென்று நான் கனவிலும் நினைக்கவில்லையே! அம்மா