பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகி இதோ, எரிமலை... புயல்... பூகம்பம் 117

அழகி, உன்னே இங்கே கொண்டு வந்து சேர்க்கும்படி நான் எல் லாத் தெய்வங்களிடமும் வேண்டியதற்குப் பலன் கிடைத்தது. தள்ளாத வயசில் உன்னை எங்கே கண்டு என்னுல் தேட முடியும் ? அழகி, நீ இங்கே அடியெடுத்து வைத்த அன்றைக்கே உன் காலில் விழுந்து கதறி அழவேண்டுமென்றிருந்தேன். அம்மா, என்னை மன்னித்துவிடு...நீ என் மருமகள்...ஆமாம், மருமகள் மன்னிப் பாயா, அழகி...? ’’ - -

அழகி பேசாமல் நின்றாள். கண்கள் பேசிக் கொண்டிருந்தன. அழகி கண்கலங்கி நின்றாள். கண்கள் விழி பிதுங்கச் சிரித்தன். ‘: இரவு மணி பத்து,’ என்றது கடிகாரம், - - - - மாயினரின் கைகளைப் பிடித்து அழைத்துச் சென்று தடுக் கில் உட்கார வைத்தாள் ; உணவு பரிமாறினுள் ; உண்டு முடிந்த தும், பசும் பால் கொடுத்தாள் ; படுக்கையை உதறிப் போட்டாள் ; வெற்றிலைத் தட்டைச் சரிபார்த்து வைத்தாள். -

சோமநாதனைப் பற்றி அழகிக்குக் கரைதலைப் பாடம். ஆகவே, இதுதான் சமயமென்று நினைத்து, அவரிடம் ஏதோ ஒன்றைத் தெரி விக்க எத்தனித்தாள். - - -

ஏதோ ஒரு நல்ல காரியத்தைச் செய்யப் போவதில் அவள் மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது ; இந்த முடிவுக்கு அவள் வருவதற் குள், அவள் பாடு மலையைக் கில்லி எலி பிடிப்பதுபோலத்தான் ஆகிவிட்டது. மனச்சாட்சிக்குச் சரித்திரம் உண்டா ? பூகோள் சாஸ்திரம்தான் உண்டா ? எல்லாம் சடுதியில் ஏற்பட்ட முடிவு !

  • சரி, சரி. நாழிகை ஊர்ப்பட்டதாச்சு. நீ சாப்பிட்டுவிட்டுத். துங்கம்மா ’ என்று துரிதப்படுத்தினர் அவர். -

“மாமா, நான் இதோ போய் விடுகிறேன். உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்.’’ என்று மென்று விழுங்கிளுள் அழகி. நான்கூட உன்னிடம் ஒரு விஷயத்தைத் தெரியப்படுத்த வேண்டுமென்றுதான் நினைத்தேன்...!” என்று தயங்கினர் அவர்.

என்ன, சொல்லுங்கள்...’ ::. * நீ முதலிலே சொல்...!’ *ம்.வந்து...’ * - - - - -

நீட்டி நெளிக்காமல், கதை எழுதுகிறமாதிரி பளிச்சென்று. சொல்லம்மா, என்று சிரித்தார் அவர். -

அந்தச் சிரிப்பைத்தான் இத்தனை விடிைகளாக அவள் ஆவலு. டன் எதிர்பார்த்திருந்தாள். : ... “ “ ... . .