பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



“அழகி வெறும் ரோஜாவல்ல !--ஜாதி ரோஜா !” 135

கொள்ளுங்கள். முரளியைப் பழிவாங்கி முடிந்தவுடன், என் இரண்

டாவது பழி உங்கள் மகன்மீதுதான் திரும்பப் போகிறது !...

என்னைப் பற்றி இனி நீங்கள் ஏன் கவலைப்படப் போகிறீர்கள் ? ஆகவே, என்னைத் தேட வேண்டாம். அதற்குப் பதிலாக, உங்கள் மகனே உங்களிடம் அழைத்துக் கொள்ளுங்கள். என்னுல் உங் களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு மன்னிக்கும்படி கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். உப்பிட்ட கைக்கு-அன்பு பேணிய இதயத்துக்கு ஏமுேழு பிறப்புக்கும் நன்றிக் கடன் செலுத்தக் கடமைப் பட்டவள் இந்த அபலை.

மறுபடியும் நினைவு படுத்துகிறேன்-அழகி வெறும் ரோஜா அல்ல ஜாதி ரோஜா ! -

- அழகி.” சாப்பிட அழைத்தாள் சுசீலா. கசங்கிப் போயிருந்த கடிதத் தைப் பந்தாக உருட்டி வீசினுள் ; பிறகு அவளைத் தொடர்ந்தாள். முரளி-செந்தாமரை ஜோடியை மறுபடியும் தேடினுள். இன்ன மும் அவர்கள் எழுந்திருக்கவில்லை. சோகம் நிறைந்த அழகியின் உதடுகளில் முறுவல் எட்டிப் பார்த்தது. -.

சாப்பாட்டு இலையில் உட்காரப் போளுள் அழகி. அப்போது போலீஸ்காரர்கள் திமுதிமு வென்று வாசற்படியில் ஏறிக்கொண் டிருந்தார்கள். ஐயோ, முரளி அத்தானையா தேடிக்கொண்டு வந்து விட்டார்கள்?’ என்று பயந்தாள் : -

“அழகி என்கிறது யாருங்க, அம்மா ?” என்றார் ஒரு ஜவான். : ஏன், நான்தான் !’ என்று பதில் கொடுத்த வண்ணம் வந்த அழகி, வீதியில் நின்ற அந்த மனிதரையும் பார்க்கத் தவற வில்லை. - -: -- -

சிவப்பு மனிதர்களைச் சட்டை செய்யாமல், ‘மாமா மாமா !” என்று கூப்பிட்டுக்கொண்டே வாசலுக்கு ஓடினுள் அழகி.

கிழவர் சோமநாதனின் பாதங்களிலே நெடுஞ்சாண் கிடையாக அழகி விழுந்து எழுந்த போது, கஜேந்திரனுடன் அழகேசனும் கின்று கொண்டிருந்தான் !