பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'134 ஜாதி ரோஜா

முரளியைத் தேடினுள். அவன் இல்லை. தற்செயலாக சுசீலாவின் வீட்டுத் தோட்டப் பகுதியில் அவளது பார்வை திரும்பியது. அங்கே நாகரிகமாக் உடுத்தி யிருந்த இரு உருவங்கள் தெரிந்தன. ஒன்று ; தாமரை. அவள் முகம் தெரிந்தது , மற்றாென்று, முரளி. அழகி யின் அனுமானம் சரி.

அழகிக்கு ஏற்பட்ட ஆனந்தம் அவ்வளவு இவ்வளவல்ல. வெளிக் கதவைத் திறந்தபோது, அவளுடைய காலடியில் ஒரு போட்டோ ஆல்பம் இடறியது. தீக்கணப்பில் இதயத்தைப் புதைத்தது போலத் துடித்தாள். எந்த ஒரு நினைவை ஞாபகப் படுத்திக் கொள்ள முயன்று முயன்று, அன்று வரை தோல்வி கண்டாளோ, அந்த ஒரு நினைவு இப்பொழுது சிலிர்த்தெழுந்தது. முன்னொரு சமயம், அவளிடம் ஆறு புகைப் படங்கள் புதிர்போட்ட அதிசயம் பொருக் கென்று சிந்தனையில் புகுந்து விட்டது. . . .

அழகேசன் ! ஈரமில்லாத பாவி அவர் 1.ஐயோ, அப்பா ! என்னைச் சூறையாடிய அழகேசன் உங்கள் உயிரையும் குடித் தாரா ?...அவர் கலியுக கிருஷ்ண பரமாத்மாவா ? என்னை மயக்கிய அந்த விஷ ரோஜாப்பூவுக்குப் பலியானவர்கள் இன்னும் எத்தனை சகோதரிகளோ ? அழகேசன் சில்க் எம்போரியத்தில் திருட்டுப் போய் விட்டதென்ற சேதி அழகேசன் கட்டிவிட்ட கதைதானு ? என்பேரில் அக்கறை கொண்டிருக்கிற கஜேந்திரனேயும் அழகேசன் பழிவாங்கி விடுவாரோ ?...அவர்...அழகேசன் எங்கே?...’ -

அழகியின் உள்ளம் பொங்கத் தொடங்கியது. கையிலிருந்த “ ஆல்பம் கைநழுவியது. அதை எடுக்கப் போனவளின் வலது கையில் கசங்கிய தாள் ஒன்று கிடைத்தது. -

“மதிப்புக்குரிய மாமா அவர்களுக்கு. அழகி. பாதம் பணிந்து எழுதுவது: தங்கள் அன்பினால் ஆனந்தக் கடலாடிக் கொண்டிருந்த என்னை அணு அனுவாகச் செத்து மடியச் செய்து விட்டது, நீங்கள் புத்தகத்தில் வைத்திருந்த கடிதம்.

ஜாதி ரோஜாவை வெறும் ரோஜாவாக்கப் பார்க்கிறீர்களே ? கான் உங்கள் புதல்வரின் கையில்ை மூன்று:முடிச்சு பெறுவதற்கு முன் என் நினைவெல்லாம் என் அத்தான் முரளியைப் பற்றியேதான். இருந்தது. ஆளுல், நான் சாஸ்திர ரீதியாக அவருக்கு-உங்கள் குமாரருக்கு உரியவளாக ஆக்கப்பட்ட பிறகு நான் என்னையே. மறந்தேன். -

முரளி உங்களிடம் வாய்க்கு வந்ததை உளறியிருப்பாரென்று உங்கள் கடிதத்தின் வரிகளிலிருந்து உணருகின்றேன். அழகி ‘நெருப்பு. இதை மாத்திரம் தயவு செய்து நினைவு வைத்துக்