பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"அழகி வெறும் ரோஜாவல்ல :-ஜாதி ரோஜா’ 133

ஞாயிற்றுக்கிழமை எங்கள் வாழ்க்கையிலே ஆனந்தமான திருப்பத்தை-அற்புதமான நிகழ்ச்சியை ஏற்படுத்தட்டும். எங்கும் நிறைந்தோனே, அழகிக்கு மறுபிறவி தா ...’ என்ற பிரார்த்தனை யுடன் நுழைந்த கர்ஸ் செந்தாமரையை பணிப் பெண் விடுதி இன். முகங் காட்டி வரவேற்றது. - -

வளைகாப்பு விசேஷம் நடந்து முடிந்தது.

  • தங்கச்சி,” என்று கூப்பிட்ட சுசீலாவிடம் எட்டி நடந்தாள் அழகி.
  • அழகி, நீ போட்ட லெட்டர் கிடைத்ததாமா ? செந்தாமரை ஏதாவது சொன்னுளா ? இன்றே உன் அத்தான் முரளி விஷயத் துக்கு ஒரு முடிவு கட்டு. அப்பால், உன் எதிர்காலத்தைப் பற்றித் தீர்மானம் செய். உன் மாமனுருக்கு நீ போடவேண்டுமென்று சொன்ன தபாலை அப்படியே மறந்துவிடு, பெரியவர் பாவம், செத்து விடுவார் !. மற்றவர்களுடைய நல்வாழ்க்கைக்கு மூச்சுப் பிடிக்க உழைக்கிற நீ உன்னைப் பற்றி ஆயிரத்தில் ஒரு பங்க்ாவது யோசிக்க வேண்டாமா ? எப்போது கேட்டாலும் சொல்றேன், சோல்றேன்’னு பதில் தெரிவித்தால் மாத்திரம் போதுமா ?...உன் கணவர்.கோபிக்காதே !...அழகேசனப் பற்றி ஒரு தகவலும் தெரியவில்லை என்றாயே, அவரைத் தேடுவதாக உத்தேசம் இருக்.

கிறதா ? உன் மாமாவுக்கு நல்லதனமாக வேறொரு கடுதாசி

எழுதிப் போடும்படி சொன்னேனே, அதையாவது நாளை விடிந்த வுடன் செய்.” என்று அபிப்பிராயம் கூறினுள் சுசீலா. மூச்சு, வர்ங்கியது.

  • அக்கா, இன்றைக்கு ஒரு நாளாவது நான் சிரித்துப்பேசிக், கொண்டிருக்க ஆசைப்படுகிறேன். அனுமதியுங்கள். பத்துப். பதினைந்து மாசத்துக்கு மேலாக அல்லும் பகலும் அழுமூஞ்சியாகவே இருந்த நான் இன்றாவது சிரித்த முகத்துடன் காணப்படுவதில் உங்களுக்கு ஆசை கிடையாதா ?. அக்கா, முதலிலே முரளி அத்தான்-தாம்ரைக்கு லாலி பாடுவோம். நான் சற்று ஓய்வாக, இருந்தால்தான் நல்லது, தலை சுற்றுகிறது, கரிக்ாலன் ரூமிலே போய் இருக்கிறேன். செந்தாமரையை இங்கே அனுப்புங்கள்...! அதோ, பந்தியில் உட்கார்ந்து விட்டார்கள். கரிகாலனைக் கவனிக், கும்படி சொல்லுங்கள். நீங்கள் குனிந்து நிமிரக் கூடாது ‘ என் ருள் அழகி. அவள் வார்த்தைகள் தேய்வதற்குள், அவள் நுழைந்த, அறைக் கதவு மூடிக் கொண்டது. வினுடிப் பொழுதுக்கு அவளுக் குக் கிறுகிறுத்தது. கட்டிலில் அமர்ந்து தலைய்ை அதன் மேல். போட்டாள். அடுத்த பத்தாவது நிமிஷம், பக்கத்து ஹாலிலே,