பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 ஜாதி ரோஜா

நோயாளியான என்னேயும் புதுப் பிறப்பெடுக்கச் செய்துவிட்டதோ ? மு.ர...ணி !... முர...ணி முரளி ... முரளி !...” -

இப்படி எண்ணிய நர்ஸ் செந்தாமரை மாடியில் நின்று கொண்டு எதிரே பார்வையை வீசினுள். செண்ட்ரல் ஸ்டேஷன் முகட்டில் வில்லுப் பாட்டுப் பாடி மகிழ்ந்து திளைத்திருந்த இயற்கை யின் பின்னணியில் முரளி நின்று கொண்டிருப்பதை அவளது மனக் கண் தரிசித்தது. -

செந்தாமரை கண்களைப் பொத்திக் கொண்டாள். அந்த முதற் சக்திப்பை நினைத்தாள். அன்று அவள் புஷ்பவதியானள். மூன்று, நான்கு நிமிஷங்கள்தாம் ஆகி யிருக்கும். வீட்டில் பெண்கள் சுற்றிச் சூழ்ந்தனர். தனி அறையிலிருந்த ஒரு ஜன்னல் வழியே வீதியை உற்று நோக்கிக் கொண்டிருந்தாள் தாமரை. அவள் பூப் பெய்திய, வுடன் அவளது கண் விரிப்பில் முதல் சந்திப்பு தந்த முதல் மனிதன் இந்த முரளி, ஆடம்பரமான உடைகளும் அழகான உருவ அமைப்பும் முரளியிடமிருந்து மாறி செந்தாமரையின் நினைவில் இடம் பெற்றன. ஒருவருக்கொருவர் நான் இன்னவன் ; ே இன்னவள் என்ற அறிமுகம் ஆவதற்கு முன்பே, அவளிடம் இனம் புரியாத இதயப் பிணைப்பு ஏற்பட்டது. காதல் பிறந்தது.

அந்த முதற் காதல் பலிதமடைய வேண்டு மென்றுதான் செக் தாமரை ஆசை கொண்டாள். தன் ஆசையில் அழகி மண்ணைப் போட்டாள் என்பதை அறிந்ததும், அழகி-முரளியின் வாடை அடிக்காத இடமாகப் பார்த்து ஒதுங்க எத்தனம் செய்தாள். தஞ்சா ஆர் சென்னைக்கு மாறியது. மாதங்கள் பல கழிந்து ஒரு நாள் சென்னையிலும் தஞ்சையையே திரும்பவும் காணப்போகிருள் என்று ஊகித்துக்கொள்ள அவளுக்கு அப்போது ஞான திருஷ்டி'யை யாரும் அருளவில்லை ! - -

தாமரைக்கு விடுதலை அளிப்பதற்கென்று இன்னொருத்தி வந் தாள். செந்தாமரை அவளிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டான். ஜெனரல் ஆஸ்பத்திரி அவளுக்குச் சொர்க்கமாகத் தோன்றியது. அண்ணுமலே மன்றமும் மின்சார வண்டியும் அவளிடம் மானசீக மாகப் பேசியிருக்க வேண்டும். அவள் தன்னலே சிரித்தாள். * ஆமாம்; அழகியின் வேண்டுகோளை நிறைவேற்றுவது என் கடமை. இதில் என் சுயநலமும் ஆட்சி புரிகிறதென்பதை நான் மறுக்க முடியாது. எப்படியாவது என் எண்ணம் பலிக்கட்டும். ஆண்டிவன் இருக்கிருன். அவன் கல்லவன்தான் ! அழகி என் னிடம் பிச்சை கேட்டாள். நாளை நான் அவனிடம் ஒரு பிச்சை கேட்கவேண்டும். ஆஹா, அந்தப் பிச்சை!-அவனால் தப்ப முடி காது! என் ன்ட்சியமும் நிறைவேறி விட்டால்.. ? புனிதமான