பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'அழகி வெறும் ரோஜாவல்ல -ஜாதி ரோஜா ‘ 13:

என்று ஒலமிட்டவாறு முரளி அத்தான் ஓடி வந்தார். அழகி. முதலில் என்னை மன்னித்தேனென்று சொல்லம்மா! உன்னைப் பற்றித் தப்பும் தவறுமாக உன் மாமாவிடம் சொல்லி விட்டேன் இந்தப் பாவி...! உண்மையில் பித்தான நான் பேயாகி விட்டேன். இதற்கு முன்னே, உன் புருஷனுக்கும் கடிதம் வேறு போட்டேன்,. உன்னைப் பற்றிச் சில ரகசியங்களைத் தெரியப்படுத்துவதாக. நல்ல வேளை, இந்தக் கொலே பாதகனின் ஆசை நிறைவேற வில்லை. அழகேசனைச் சந்திக்க விடவில்லை விதி 1’ என்று விம்மினர்.

நானே கல்லாகிப் போனேன். திடுதிப்பென்று கல்லுக்கு உணர்வு வந்தது. திரும்பவும் அத்தான் பேசினர். ஐந்து வய திலே-அறியாப் பருவத்திலே நானும் அவரும் பழகிய பாசத்தில் விளைந்த அன்பு காதலாகி விளையாடியதென்றும், அந்த முதற். காதலை அவரால் மறப்பது சாத்தியமாக அமையவில்லை யென்றும், என்னே மறக்க அவர் மதுவை நினைக்கத் தொடங்கியதாகவும், பின்னர் அதிலும் விடிவு ஏற்படாமற் போகவே, உலகத்தையே. மறந்துவிடத் துணிந்த சமயத்தில் கார் விபத்திற்குள்ளானதாகவும், கேற்று நீ அவரைக் காத்தருளிய விவரத்தையும் ஆதியோடந்தமாகச் சொன்னுர்.

என் முதற் காதல் தோற்றது. என்வரை அது நடந்த கதை.’ அந்தக் கதை இனி உன் முடிவில் சுபம் அடைய வேண்டும். ஆம், உன் முதற் காதல் வெற்றிபெற வேண்டும். உனக்கு ஆறுதல் மருந்து தர மகாத்மா இப்போது மனோதத்துவ டாக்டராக மாறி எனக்கு உதவுகிறார். அவர் சொல்கிறார், காதல் இல்லாத கல்யா னத்தை ஏற்றுக்கொள்ள முடியாது ‘ என்று. ஊம்’ என்று ஒரு. வார்த்தை சொல், சகோதரி. நான் சிரிப்பேன் ; என் அத்தான் சிரிப்பார். . - -

நான் எழுதிப் பரிசு பெற்ற ரூபாய் ஐயாயிரத்தையும் உங்கள் இருவர் பேரிலும் பாங்கியில் போட உத்தேசித்திருக்கிறேன். இதற்கு என் மாமனரிடம் ஏற்பாடு செய்வேன்.

தாமரை, என்னை வாழ வைப்பாயா ? என் அத்தானை புனர் ஜென்மம் எடுக்கச் செய்ய மாட்டாயா...? -

வா ! பறந்தோடி வா! நாளே சுசீலா அக்காவுக்கு வளை. காப்பு அல்லவா ? நல்ல சேதி கொண்டு வா...! ஓடோடி வா!...” பக்கக் கணக்கில் வளர்ந்த மேற்படி கடிதத்தை மடக்கினுள், நர்ஸ் செந்தாமரை. தன்னை மறக்காமல் சிரித்தாள் ; சிரிப்பு மாத் திரம்தன்னை மறந்தது. . . . .

  • ஒரு பிறவி எடுத்தவர்களுக்கு மறு பிறவி தரவல்லது ஆஸ் பத்திரி என்பது மெய்தாளு ? ஜெனரல் ஆஸ்பத்திரி காதல்