பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்திச் செவ்வானம் அப்போதே மழை ! 14}

அருமை மகனைப் பெற்றவனுக்கு இப்படியாவது ஒரு நிம்மதி கிடைக் கட்டுமே ! காசி ராமேஸ்வரம் க்ஷேத்திராடனம் செய்து பெற்ற மாணிக்கக் கட்டியாயிற்றே என் செல்வன் .சுசீலா, இந்த உயிலை அழகி மறுக்காமல் பெற்றுக்கொள்ள வழிசெய்துவிடு, போதும். என் னுடைய சுயார்ஜித சொத்துத்தான் இதில் குறிக்கப்பட்டிருக்கிற பத்து லட்ச ரூபாயும். பங்களாவும் அதுக்கேதான். அப்புறம் அழகி யைப் பற்றின் இன்னொரு விஷயத்தையும் நீயே தீர்மானிக்க வேண் டும். அதுதான் அழகியின் எதிர்கால வாழ்வு. அழகேசனப் பழி வாங்குவதாகவும் அவன் பேரிலே கேஸ் போடப்போவதாகவும் அடிக்கடி அழகி சொல்லுது. இதுக்கும் ஒரு முடிவு கட்டவேணும். என் மருமகளுக்குக் கிடைத்த பரிசுப் பணம் ரூபாய் ஐயாயிரத்தை யும் தனியே பாங்கில் போட்டு விடுகிறேன். அது தனிப் பணம். அழகியிடம் பேசி ஒரு தீர்மானத்துக்கு வந்தாகவேனும், இனியும் நாள் கடத்தித் கொண்டு போவது அவ்வளவு உசிதமல்ல. அழகே சனின் நிழலில் அழகி ஒண்டுமென்று எனக்குத் தோன்ற வில்லை. அழகி என்னுடைய உயிலுக்கு சம்மதம் சொல்லிவிட்டால், இன்று வேனுமானுலும், அழகேசனுக்கு விடுதலைப் பத்திரம் கொடுத்து விடுகிறேன். அவன் செய்த அக்கிரமங்களே அவனைப் பழிவாங்கி விடும் , அவன் கம்பி எண்ணுமல் தப்பிக்கவும் முடியாது. அகியாய மாக ஒரு ரோஜாப் பூவைக் கருகிக் காயச் செய்து விட்டானே கொடுமைக்காரன் !...”

சோமநாதனுக்கு அதற்குமேல் பேசத் தெம்பில்லை. இருமல் துளைத் தெடுத்தது. கண்ணிர் தொண்டைக் குழியில் தேங்கியது.

கோடைக்குப் புதிதாக அமைத்திருந்த மாடிப் பந்தலில் மாலைக் காற்று வெண்சாமரம் வீசியது ; கடலை அனைத்துப் பிறந்த தென்ற லல்லவா ? m . . . “

சுசீலாவுக்குப் பெரியவரிடம் என்ன ஆறுதல் கூறுவதென்று கிதானப்படவில்லை. ஆகவே, காப்பி கொண்டு வருவதாகச் சொல் லிக் கீழே இறங்கினுள். ராமலிங்கத்திபும் எல்லாவற்றையும் வெளி பிட்டாள். -

இன்று இரவு பெரியவர் இங்கேயே தங்கட்டும். காலேயில்

அழகியைக் கலந்து பேசி முடிவு சொல்வதாகத் தெரிவித்து விடு,’ என்றார் சுசீலாவின் கணவர். - -

காப்பி தயாரிக்கச் சமையல் அறைக்குச் சென்றாள் சுசீலா. அப்போது கஜேந்திரன் வாசற்படியில்கின்றதைக் கவனித்தாள்: உடனே திரும்பி வந்தாள். -

அழகியை ஏங்கே காளுேம்? இன்னுமா தூங்குகிரும் கள் ? ? என்றார் கஜேந்திரன்.