பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்திச் செவ்வானம் அப்போதே மழை ! 145

வேண்டுமென்பது அழகியின் லட்சியமானுல் அது தவறு. எந்த மனிதனும் என்றென்றுமே மிருகமாக இருக்கமாட்டான் ; ஒரு நாள் மனிதனுக மாறித்தான் தீருவான். ஏன், முரளியைத்தான் உதார ணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்களேன். அவர் ஆடாத ஆட்டமா ? தகாத நடவடிக்கைகளின் காரணமாகச் சிவப்புத் தொப்பிகளுக்கு வேலை வைத்த மனிதர், இன்று நானே அதிசயப்படும்படி மாறி விட்டாரே ?...அழகேசன் மீட்டும் ஏன் மாறமாட்டார் ?...நான் தஞ்சாவூரிலிருந்து திருச்சியில் உறவினர் வீட்டில் இருந்தபோது, அழகேசனுடைய தவருண போக்கைக் கேள்விப்பட்டேன். மைலாப் பூரில் திருமணத்துக்கு வந்து இறங்கியிருந்த அழகிக்கு லெட்டர் எழுதித் தெரிவித்தேன். அப்படிப்பட்ட அழகேசன்தான் புத்தி தெளிந்து விட்டாரென்று, அதே நான்தான் இப்பொழுது ஆயிரம் தரம் சொல்கிறேன்...! அப்படித்தான் அவர் மாரு விட்டால், இவள் அவரை மாற்ற முற்படவேண்டும். அழகி தான் ஒரு பெண் என் பதையே மறந்து விடுகிருள்...பாவம் !...” -

மருத்துவப் பணிப் பெண்ணின் இதயம் உரைத்த பேச்சு சுசீலாவிற்கு அதிசயமாக யிருந்தது. பெரியவரை மாடியில் வைத்து விட்டுக் கதைத்துக் கொண்டிருந்தது அவள் நினைவுக்கு வந்த தும், காப்பியுடன் உயரச் சென்றாள்.

மல்லிகேஸ்வரர் கோயிற் கோபுரம் ஒளி ஏந்தி நின்றது. ‘ ஆண்டவனே, உன்னை நம்ப ஆரம்பித்திருக்கிருள் அழகி : அவளை அவள் கணவர் அழகேசனுடன் வாழ அனுக்கிரகம் செய்!” என்று பிரார்த்தித்தாள். -

கீழே வந்தபோது, அக்கா, அழகி எழுந்திருக்கவேயில்லை ! பூட்டின கதவும் திறக்கக் காணுேம். என்ன மாயமோ தெரி யலையே ‘ என்று பதட்டத்துடன் சொன்னுள் வேலைக்காரி வள்ளி. உள் அறையின் கதவுகளை உடைத்துத்தான் திறக்க முடிந்தது. அழகி செத்த பிணம்போல பிரக்ஞையின்றித் தரையில் கிடந்தாள். :பக்கத்தில் கசங்கிய காகிதக் கிழிசல் காணப்பட்டது. அதில் வெள்ளைத் தூள் ஒட்டியிருந்தது. ஐயையோ, விஷமா ?’ என்று அலறிஞள் சுசீலா. அந்திச் செவ்வானம் அப்பொழுதேதான் மழை. பொழியும் !

பயப்படாதீர்கள், அக்கா உட்கொள்ளத் தயாரித்த விஷத் துள் பொட்டலத்தை மாற்றி, தூக்க மருந்துப் பொட்டலத்தை அந்த இடத்தில் வைத்துவிட்டேன். அழகியை முழுக்க முழுக்க அறிந்தவள். நான். ஆனதால்தான் அவளேயும் காப்பாற்ற முடிந்தது. அழகேசனுக்குச் சொந்தமான உயிரைப் போக்கடித்துக் கொள்ள இவளுக்கு ஏது உரிமை ? இவள் கழுத்தை அலங்கரிக்கும் மாங்கல்யத்துக்குத் துரோகம் செய்ய இவளால் முடியாது...! முடியவே முடியாது ’ என்றாள் தாமரை. ‘.