பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 ஜாதி ரோஜா

-மறக்க மாட்டேன். அதற்குத்தான் அழகேசன் பேரில் வழக்கு தொடுப்பதைக்கூட மறந்து விட்டேன், நேற்று இரவிலிருந்து. விதி செய்த பிழையைத் திருத்துவது முடியாது -அழகேசனுடைய தாலி எனக்கு பூவும் மஞ்சளும் தரட்டும். தஞ்சை என்னே அழைக்கிறது. அங்கு என்னுடைய இலக்கியப் பணி தொடரும். ஓரளவு அமைதி பெறுவேன். என் மாமனர்-அவர் மட்டும் அன்றைக்கு உடல் கலத்தோடு இருந்திருந்தால், இந்த அபாக்கியவதி பாக்கியவதியாகத் திகழ்ந்திருப்பேன் 1.எல்லாம் பழங்கதை ஆறின கஞ்சி ; பலிக் காத களு !...” -

அழகி இன்னும் என்ன வெல்லாமோ பேசத் துடித்தாள். அதற் குள் செந்தாமரை குறுக்கிட்டாள்: ‘அழகி, எனக்கு மண்டை வெடித்துவிடும் போலிருக்கிறது , தயவுசெய்து அத்தோடு நிறுத்து!’

ஒரு கணம் அழகி சித்தபேத மடைந்தவள் மாதிரி ‘கடகட’ வென்று சிரித்தாள். மறுவினுடி, பயப்படாதே, தாமரை!... என் வேண்டுகோளை நீ மறுத்தால், என் நிலை இப்படித்தான் ஆகுமென் பதற்கு இது ஒரு ஒத்திகை” என்று எச்சரித்தாள். - -

மெரின கடற்கரையில் அன்று அழகிக்கு உயிர் தந்தவன் கரி காலன். இன்று அழகிக்கு உயிர் கொடுக்க செந்தாமரை உறுதி. பூண்டாள். .

கண்ணுமூச்சி விளையாட்டிலே கண்களை இறுகக் கட்டிக் கொண்ட குழந்தைக்கு எல்லாம் இருட்டாக இருக்கும் ; அது திண். டாடும். ஆனல் அக்குழந்தையின் திண்டாட்டத்தைக்கண்டு, விளை யாட்டில் கலந்துகொண்ட மற்றப் பிள்ளைகள் கை கொட்டிச் சிரித்து வேடிக்கை பண்ணுவது உண்டல்லவா ?

கண்கள் கட்டப்பட்ட குழந்தையின் நிலையில் இருந்தாள் அழகி. கண்டும் காணுமலும் உலகம் அவளை ஏளனம் செய்வதாகப் புலப்பட்டது. அவள் அழுதாள் ; அரற்றினுள் அலறினுள் துடித் தாள் : துவண்டாள் ; தன்னை யாரோ, துண்டு துண்டாக வெட்டிக் கூறு போட்டிருப்பதாக உணர்ந்தாள். - -

முதல் இரவை ஆசையுடன் வரவேற்கக் காத்திருக்கும் குலச் சுடரின் குதூகலம்போல, நிறைமதிப் பெண் நல்லாள் பிறைத் திலகம் இட்டுக் கோலாகலமாகத் திகழ்ந்தாள்.

கூடித்துக் கண்ணுடியில் தெரிந்த தன் நெற்றிக் குங்குமத்தைக் கவனித்தாள் அழகி. சிறிதளவு கலைத்திருந்தது. சுட்டுவிரல் நகக்கண்ணினுல் குங்குமம் எடுத்து அதை நெற்றியில் வைத்தாள். மறு கணம், ஆவுள் உடம்பு நிலை பெயர்ந்து குலுங்கத் தொடங்கியது. ‘உனக்கு மஞ்சள் குங்குமம் தந்தது யார்?’ என்ற குரல் எங்கி