பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஒரு வரம் தா !” 33

சாவுடன் மன்றாடிக் கொண்டிருப்பதாகச் சேதி அனுப்புகிருளல்ல வா அவளது சிநேகிதி?...” என்று குறுக்குக் கேள்வி விடுத்தாள் மருத்துவப் பணிப்பெண்.

அதற்குள் குறுக்கிட்ட அழகி, அப்படியென்றால், நீ மயிலாப் பூருக்குத் தகவல் சொல்லி விட்டாயா?” என்று அச்சத்தோடு கேள்வி கேட்டாள். -

ஆம்; உன் கணவர் வீட்டில் போன் வசதி உண்டல்லவா ? போனில் விஷயத்தைச் சொல்லத்தான் முதலில் நினைத்தேன், அப் புறம், அதன் விளைவு ஏதாவது விபரீதத்தில் போய் முடியுமோ என்று பயந்து, ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து இந்த வார்டுக்கு. பொறுப்பான டாக்டர் அனுப்புவது போல தந்தி கொடுக்கச் செய் தேன். உனக்கு விசித்திரமாகத் தோன்றும். ஆனல் உன்னிடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன். உன் கதையில், புருஷனை வெறுத்துத் தள்ளி உதறியெறிந்து விட்டு மனைவி கித்திய கன்னியாக வாழ்க்கை நடத்துவதாக முடித்திருக்கிருயே, அம்மாதிரி நீ உன்னை ஆக்கிக்கொண்டுவிடாதே சொல்லடி பாராசக்தி'யின் முடிவை உனக்குச் சரியாக அமைக்கத் தெரியவில்லை; உன் எழுத்துத் துறை ‘யில் நான் குறுக்கிட மாட்டேன். அதற்கு எனக்கு அருகதையும் கிடையாது. ஆனால், உன் வாழ்க்கைக் கதை இன்ப முடிவைத் தான் பெறவேண்டும்.அப்படித்தான் நடக்கவும் போகிறது...!” என்று வேகமான குரலில் உறுதி தொனிக்கப் பேசி நிறுத்தினுள் செந்தாமரை. அவளுடைய முகத்தில் நீர்த்துளிகள் சில ஓடின. அவை வியர்வையல்ல! -

விண்ணில் மின்னல் படரும் நேரம், அழகி மண்னே மறந்தாள். மண் உயிர் பெற்றது. மயிலாப்பூரில் அவள் கணவன் அழகேசனின் பங்களா, லஸ் முனையிலிருந்த அழகேசன் ஸில்க் எம்டோரியம்’ எல்லாம் அவளிடம் பேசின. .


செந்தாமரை...’ என்று .L, ஏனே u நிறுத்தி விட்டாள். எதிர்த்திருந்த பிளாக்குகளைப் பார்வையிட்டுக் கொண்டு வந்த தலைமை டாக்டர் அவ்வழியே நடந்து சென்று கொண்டிருந்தார். செந்தாமரை மரியாதையாக எழுந்து நின்றாள். நர்ஸைப் பார்த்துவிட்டு அழகி, கம்:மென்று இருந்தாள். மின்சார ரயில் காதைத் துளைத்துச் சென்றது; சென்ட்ரல் ஸ்டேஷன் நிழலாடிக் கொண்டிருந்தது !

செந்தாமரை, என்னுடன் கூடப் பிறந்தவள் யாரும் இல்லை; அதற்கு நான் பாக்கியமும் செய்யவில்லை. ஆனுலும் ஒருத்தி என்க். குச் சகோதரியாகக் கிடைத்து விட்டிருக்கிருள்; என்னைப் பேற்