பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஜாதி ரோஜா

கடைசியில் என்னேயே தாக்க ஆரம்பித்துவிட்டாயே? நான் சமீபத் தில் எழுதியிருந்த சொல்லடி, பராசக்தி’ என்ற கதையை மனசில் வைத்துக்கொண்டுதான் இவ்வளவு அமர்க்களமாகப் பேசினுயா? பேஷ், பேஷ்!” என்று கூறிச் சிரித்தாள் அழகி. அந்தச் சிரிப்பில் உயிர் இல்லை. -

அழகி, உன்னுடைய ஜீவனற்ற சிரிப்புக்கு ஜீவன் அளிக்க வேண்டுமென்பதுதான் என் ஆசை.” . - . . .
  • செந்தாமரை, முதலில் உன் விரக்திச் சிரிப்பிற்கு மாற்றுக் கண்டுபிடிக்து விட்டாயா?...நான் சற்றுமுன் சொன்ன நர்ஸ் ஒருத்தி யின் நிறைவேருத காதலின் கதையைத் திருத்தியமைக்க நீ வழி வகுத்துச் சொல். உன் சொந்தக் கதைக்கு இன்ப முடிவைக் காட்ட என் கடைசி மூச்சுவரை என்னுலான கடமையைச் செய்கிறேன்!” என்று உணர்ச்சிப் பெருக்குடன் பேசினுள் அழகி. பத்து நாட்கள் வரை ஆஸ்பத்திரிப் படுக்கைக்குள்ளே முடங்கிக் கிடந்த அவளது வெளிறிய முகத்திரையில் இப்போது அங்கும் இங்குமாக செந்நிறத் துளிகள் பாய்ந்தோடிக் கொண்டிருந்தன.

சமுரளி என்னை மறந்தார். நான் இந்த உலகத்தையே மறந்து

விட்டேன். இப்போது அது வேண்டாத சிந்தன. காதல் ஒர் அவசி யத்தேவை என்பதை அறிவேன். ஆனல், என்னுடையதைக் காட் டிலும் உன் பிரச்னைக்குத்தான் வெகு விரைவாக முடிவு ஏற்படுத்த வேண்டும். அதோ, உன் அழகுக் கழுத்தில் அற்புதமாக ஒளி வீசிக் கொண்டிருக்கும் உன்னுடைய உரிமைச் சொத்தான அந்த மங்கல நாண் எனக்கும் இடும் கட்டளை இது. நீ இன்றைக்கு டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கும் உன்னத் தன் வீட்டுக்கு அழைத்துப் போக உன் கணவர் இங்கே வருவதற்கும் சரியாக இருக்குமென்று நான் நம்புகிறேன். என்றாள் செந்தாமரை. அவளது பேச்சின் முன் பகு தியில் கடமையுணர்ச்சியின் உத்வேகமும், பிற்பகுதியில் நம்பிக்கை யின் வலுவும் குரல் கொடுத்தன.

கண்கள் சிவக்க, உதடுகள் துடிக்கக் கோபாவேசத்துடன் அழகி கேட்டாள், என்ன புதிர் போடுகிறாய், செந்தாமரை?” {},

புதிர்போட்டு உலகத்தை ஆட்டிப்படைத்து வேடிக்கை பார்ப்பதற்குத்தான் ஆண்டவன் ஒருவன் இருக்கிருனே?-நான் எதற்காக புதிர் போடவேண்டும்? நின்று கிதானித்து உன்னுடைய சொல்லடி பராசக்தி கதையை மறுபடியும் நினைத்துப்பார். ஒருவன் ஒருத்தியை வலுக்கட்டாயமாகக் கல்யாண்ம் செய்து கொள்கிருன். அவளோ அவனே விட்டுப் பிரிந்து விடுகிருள் ஒரு நாள் அவள்