பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஒரு வரம் தா p” 35

தால்கூட நீ என்னுடைய தெய்வமே என்பதற்குத் தடை என்ன இருக்கிறது ?...இந்த அழகேசன் அவர்களைப்பற்றி -ஆம்; என் னுடைய கணவர் என்ற பட்டப்பெயர் பெற்றிருக்கும் இந்த ஆழ கேசனைப் பற்றின சில் அதிசயச் செய்திகளை முதன் முதலில் எனக்குத் தெரிவித்தவள் நீயே அல்லவா? என் கழுத்தில் மஞ்சள் கயிறு ஏறிய அன்றைக்கு, நான் என்னை மறந்த மயக்கத் திலே கடற்கரை வழியிலே கிட்ந்தேன். சைக்கிள் ரிக்ஷாவில் வைத்து கரிகாலன் என்னை அழைத்துச் சென்றார், தன் தமக்கை யார் வீட்டுக்கு. . *:

‘அங்கே வேளை கெட்ட வேளையிலே அழகேசன் என்னைத் தேடி வந்துவிட்டார். நான் படுத்திருந்த அறையை அவர் காட்டியிருக்கிறார். அழகேசனக் கண்டதும், எனக்கு யோசிக்கக் கூட நேரமில்லை. என்னைத் தடுத்து நிறுத்தப் பிரயத்தனப்பட்ட கதவி களைத் தட்டி எறிந்துவிட்டு, பிராட்வே ச்ந்து முனையில் ஒடினேன். அபயக்குரல் கேட்டு அபயம் அளிக்கவேண்டிய ஒரு ஆம்புலன்ஸ் வண்டி எனக்கு எமனுக வந்தபோது, நீ அதிலிருந்து தெய்வமாகத் தோன்றி என்னைக் கர்ப்பாற்றினுய் ..... சில நாட்களாக உயிருடன் போராடின எனக்குச் சிகிச்சையும் அளித்து வருகிறாய் -இதை யெல்லாம் நான் எப்படி மறக்க முடியும்?...”-குடல்களிஇே? இரைப்பெடுத்தது. ஒரு மடக்கு சுடு தண்ணீர் அருந்தினுள் அழகி. * அன்பு காட்டினேன், நானும் மனிதப் பூண்டின் ஒரு பகுதி என்பதை மறந்து விடாமலிருப்பதற்காக கடமையைச் செய்தேன், . என் உடலில் மின்னும் இந்த வெள்ளை ஆடைகளுக்குக் கட்டுப் பட்டு ; உரிமைகளைக் கோரினேன், நீயும் என் இனமானபடி யால் .....தெய்வங்களுக்குத்தான் இப்போதெல்லாம் நிரம்பச் சோதனைக் கட்டங்கள் வருகின்றன; ஆனல் மன்தர்களோ அவற்றி லிருந்து நாசூக்காகத் தப்பித்து வருகிறார்கள். ஆகவே, என்ன்ை விட்டுவிடு. அழகி...’ : . . . . . . . . . . . - -

செந்தாமரை பேச்சை நிறுத்தினுள். அழகி சிரிப்பை நிறுத்தி விட்டாள். - ... - . . . . -

இன்னும் சற்றுநேரம் நீ சினி, அழகி. உன் முகத்தில் புன் னகையைக் காணவே முடிவதில்லையே? ஆமாம்; சிரி, தோழி ‘

நான் சிரிப்பது இருக்கட்டும்; இப்போது உன்னிடம் நான் கேட்கப்போகும் வர்த்தை நீ அறிந்தால், நீ அழுதுவிடுவாய், செந். தாமரை 1’’ . . - -
மனங்கொண்டது மாளிகை. என்ன வரம் வேணும்: ம். சொல், அழகி 1’’ - *......