பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ஜாதி ரோஜா

‘ உயிரைப் பணயம் வைத்து எந்தப் புலியிடமிருந்து தப்பித்து வந்தேனே, அதே புலியிடம் திரும்பவும் என்னை ஒப்புவித்து விடாதே ஒரு அழகிக்கு ஒரு அழகேசன்தான் தெய்வமாக அமையக் கொடுத்து வைக்கவில்லை : ஒரு செந்தாமரையாவது அமையட்டுமே ? அழகேசனின் நிழல் பட்டால்கூட என் உயிர்ப் பூ வாடிக் கருகிவிடும்.அவர் என்னை மீண்டும் தேடி வந்தாலும், தயவு செய்து என்னே அவரிடம் காட்டிவிடாதே, செந்தாமரை !...”

மேல் மூச்சு வாங்கியது. தாலி எம்பி எம்பிக் குதித்துக்கொண் டிருந்தது.

  • அழகி நேற்று இரவு நீ சொன்னுய்-அழகேசன் உன்னைக் கூண்டுக் கிளியாக்கச் சதி செய்வதாக. ஆளுல், இப்போது அவரே கூண்டுப் புலியாக ஆகப் போகிறார். நீ இன்று டிஸ்சார்ஜ் ஆனவுடன், எங்கள் நர்ஸ் விடுதியில் நான் உன்னிடம் தனித்துப் பேசவேண்டிய சில விஷயங்கள்-ஆம் அழகேசனப் பற்றிய ரகசியங்கள் இருக்கின்றன. எனக்கு ட்யூட்டிக்கு நேரமாய் விட்டது. அதோ, உனக்குக் காலை ஆகாரம், பால் எல்லாம் காத்திருக் கின்றன. பிறகு சந்திக்கிறேன்...’ -

உடைகளைச் சரிசெய்து கொண்டாள் ; தலையில் கட்டப்பட் டிருந்த டவலே நெற்றிப் பக்கம் தளர்த்தினுள் ; கைக்கடியாரத்தைப் பார்த்தாள் ; ; விர் ரென்று நடந்தாள் செந்தாமரை.

அழகிக்கு மறுபடி சுய ஞாபகம் வந்தது. மேஜைமீது கிடந்த “மார்பியா, பெனிஸிலின்’, இன்னும் ஏதேதோ ஊசி மருந்து வகை களும், குளுகோஸ் மாவு டப்பாக்களும், பலவகை மருந்துச் சீசாக் களும் அவள்முன் சுற்றத் தொடங்கின, உருட்டிவிடப்பட்ட கோலிக் குண்டுகளாக. . . . . . .

மத்தியான்னம் அழகிக்கு ஆஸ்பத்திரியிலிருந்து விடுதலை : கிடைத்தது. நர்ஸ் விடுதிக்குத் தன் சிநேகிதியையும் அழைத்துச் சென்றாள் நர்ஸ் செந்தாமரை. அங்கேயே இருவரும் உண்வு கொண்டு, ஒய்வு எடுத்துக் கொண்டார்கள்.

இரவு ஒன்பது மணிக்கெல்லாம் நான் திரும்பி வந்து விடு வேன். நிறையப் பேச வேண்டுமென்று சொன்னேன் அல்லவா? உனக்குத்தான் தனிமை ரொம்பப் பிடிக்குமே? ஒன்று எழுது; அல்லது படி, கூடாது, கூடாது. இந்த இரண்டையுமே இன்ன்ம் கொஞ்சகாளேக்கு முட்டை கட்டிப் போட்டு வை. அப்போதுதான் * மயக்க நோய் உனக்குத்திரும்பவும் வராமல் இருக்கும்; உடல் கலமும் பாதிக்கப்படாமல் இருக்கும். வேண்டிய மட்டும் துங்கு.