பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

” ஒரு வரம் தா !” 37

சரி, கான் போய் வரட்டுமா?’ என்று விடை கேட்டபடி, இடதுகை

மணிக்கட்டில் கடிகாரத்தை கட்டிக்கொண்டாள் செந்தாமரை.

  • உனக்காக நான் காத்துக் கொண்டிருப்பேன். சீக்கிரமே.

வந்து விடு, செந்தாமரை !’ என்று நினைவு படுத்தினுள் அழகி.

  • ஆகட்டும் ‘-செந்தாமரை பிரிந்து சென்றாள்.

இரவு வந்தது; ஆல்ை, நிலவு வரவில்லை. “ தாமரை, தாமரை ‘ என்று கைதட்டிக் கூவியழைத்த: தோழிகள் கூட்டத்துக் கெல்லாம் அவசரப் பதிலை வாரி யிறைத்து. விட்டு நடக்கலானுள் செந்தாமரை. போக்குவரத்துக் கட்டுப்பாடு: களுக்குப் பணிந்தாள். அழகி அவள் கண்ணுக்குள்ளே நின்றாள்.

  • அழகி, அழகி ‘ என்று குரல் கொடுத்துக்கொண்டே தன். அறையின் கதவைத் தட்டினுள் செந்தாமரை. வெளித் தாழ்வாரத். தின் விளக்கு விசையைப் பொருத்தினுள். கதவு பூட்டப்பட் டிருந்தது. - ... “

அடுத்த அறையிலிருந்த நர்ஸ் ஒருத்தி அவளிடம் கடிதம் ஒன்றையும், சாவி ஒன்றையும் கொடுத்துவிட்டுப் போனுள்.

செந்தாமரை கடிதத்தின் உறையைத் தாறுமாருகக் கிழித்தாள். பெருமூச் செறிந்தபடி வெளியே தலை நீட்டிய கடிதம் அறிவித்த தக வல்கள் கீழே தரப்பட்டிருக்கின்றன. .

அன்புள்ள தாமரை,

என்னை நீ அறிவாய். ஆனால், என் கதையை நீ அறியமாட் டாய். நானே உன்னிடம் அழகேசனைப் பற்றிய சில ரகசியங்களைச். சொல்லவேண்டுமென்றிருந்தேன். அதற்குள் நீயே அவரைப் பற்றின் ரகசியச் செய்திகள் பலவற்றை இன்று சொல்லப் போவ தாகப் புதிர் போட்டாய். என் மஞ்சள் தாலி என்னை நிமிஷத்துக்கு, நிமிஷம் நையாண்டி பண்ணிக்கொண்டே யிருக்கிறது. என் மனம் விடிைக்கு வினடி ரத்தக் கண்ணிர் வடித்துக்கொண்டே யிருக் கிறது. இப்படிப்பட்ட சித்திரவதையை என்னுல் தாளவே முடிய வில்லை-அதுதான் புறப்பட்டு விட்டேன். என்னை வரவேற்க இந்த உலகத்திலே வேறு யார் இருக்கிறார்கள், உன்னைத் தவிர ? கவே, விரைவிலேயே உன்னைச் சந்திப்பேன். அப்போது அழகியிடமிருந்து புதிய பல திடுக்கிடும் விஷயங்களை நீ அறிந்து கொள்வாய்... அதோ, விதி கிரிக்கிறதே, கேட்கவில்லையா ? * இப்படிக்கு,

அழகி.” செந்தாமரை கண்ணிர் வடித்துக் கொண்டிருந்தாள்.