பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. புரட்சிப் பெண் அழகி !

தமிழ்த் தொண்டு பத்திரிகை ஆசிரியர் பரிமேலழகரைக் கண்டவுடன், கரிகாலனுக்கு ஏதோ பெரும் நிதி கிடைத்தாற்போல அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்த்து. ஹமில்டன் கம்பெனி'யின் ஞாபகம் இல்லை'; ‘ரெமிங்க்ட்ன் டைப் ரைட்டர் நினைவும் இல்லை. இலக்கிய உலகம் கரிகாலனின் முன்னே இன்பப் பண்பாடிச் சிற்றியது; ரசிகன் அவ்வுலகத்தின் பாதத்தில் அமர்ந்து ரங்க ராட்டி னம் ஆடிக் கொண்டிருந்தான். -

ஒரு மணி நேரம் அதிகாரியிடம் அனுமதி பெற்றுக்கொண்டு, ஆசிரியருடன் புறப்பட்டான் கரிகாலன். சைணு பஜார் முனையில் காப்பி பலகாரம் சாப்பிட்டார்கள். பிறகு நடந்தார்கள். பட்டணத்தின் நாகரிகத்தின் வளர்ச்சியைக் கண்டு கண்கள் அகல விரிந்தனஆச்சரியத்தினுல். பசிக் கொடுமையின் வளர்ச்சியைப் பார்த்த வுடன் அவை இன்னும் அகலமாக விரிந்தன-அனுதாபத்தினுல்.

வழி நிழலில் சற்றுநேரம் நின்று பேசினர்கள் இருவரும்.

  • இப்படிப்பட்ட இருதுருவக் காட்சிசள் இல்லையென்றால்,

எழுத்தாளர்களுக்கு அப்புறம் வேலையில்லைதானே, ஸார் ?’ என்று கேட்டான் கரிகாலன். -

ரொம்பவும் துணிச்சலான கேள்விதான். வாழ்க்கையைப் படித்து எழுதினுல்தானே கற்பனை சிறக்க முடியும்!” என்று விடை யளித்தார் ஆசிரியர். - .

வாழ்க்கையைப் படிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுகிறதற்கு முன்னமேயே சிலர் கதைகள் எழுத ஆரம்பித்து விடுகிறார்களே?” அது அவரவர்களின் கற்பனை வளத்தைப் பொறுத்த விஷ யம். எங்கள் புத்திரிகையில் அழகி என்றாெரு பெண் கதை கள் எழுதி வருகிறார்கள். நீங்கள் கட்டாயம் பிடித்திருப்பீர்கள்.

அறுபது வயது நிரம்பியவர் மாதிரி அவ்வளவு தத்ரூபமாகக் கதை, கள் எழுதுகிறர்கள்...’ என்றார் பரிமேலழகர் .

“அழகியின் எழுத்துக்கள் என்றால் எனக்கு ரொம்பவும்

பித்து, ஆசிரியர் ஸார். அழகிக்கு சமீபத்தில்தான் கல்யாணம் கடந்தது. - - --