பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சிப் பெண் அழகி 39

“ நான் அப்போது ஊரில் இல்லை. திருமணத்திற்குப் போக முடியவில்லை. இரண்டுநாள் முந்தி அழகிய்ைத் தேடிப் போனேன், மயிலாப்பூருக்கு. அங்கே அழகியின் கணவர்தான் இருந்தார். விஷயத்தைச் சொன்னேன். அழகி ஊருக்கு போயிருப்பதாகச் சொன்னர். பயனுள்ள எழுத்துக்களை மட்டுமே எழுதும் இத் நாளைய கதாசிரியர்களின் இல்க்கியப் புத்தகங்கள் நான்கை அழகி யின் பெயரிட்டுத் திருமணப் பரிசாகக் கொடுத்துவிட்டுத் திரும்பி னேன். அது சரி; பார்த்திர்களா, நான் உங்களைத் தேடி வந்ததன் காரணத்தைச் சொல்லாமல் வம்பளந்து கொண்டிருக்கிறேன் ! அழ. கிக்கும் அழகேசனுக்கும் ராசி யில்லையாமே ? இந்த ரகசியத்தைக் காலையில்தான் அறிந்தேன். என்னிடம் அழகியின் இருப்பிடத்தின் விலாசம் கேட்டு அவள் உறவினர் ஒருவர் வந்திருந்தார். முரளி என்று பெயர். அழ்கேசனிடம் போய், அழகியைத் தனியே கண்டு பேச வேண்டுமென்றும் அவள் தன்னுடைய அத்தை பெண் என் றும் சொன்னுராம். அழகேசன் ஒப்பவில்லையாம். கொடுக்கப்பட வேண்டிய மரியாதையைத் தன் பங்கிற்கு எடுத்துக்கொண்டு தாறு மாருகப் பேசி அனுப்பி விட்டாராம். முரளி, பம்பாய்க்குத் தொழில் விஷயமாகப் போய்த் திரும்பும் ஒருமாத இடைவெளிக்குள் ஏகப் பட்ட குழப்பங்கள் கடந்துவிட்டனவாம். முதலில் அழகியை அவர் தான் கைப்பிடிப்பதாக இருந்ததாம். ‘ என்று விவரித்தார் பரிமே லழகர், - - -

  • ஐயா, அழகிக்கு அழகேசன் உறவா? கேட்டீர்களா?”

‘ அழகிக்கு ஒன்றுவிட்ட முறையில் அத்தான் ஆகவேண்டு மாம் அழகேசன் 1’’ -

‘ ஆமாம், இப்போது அழகியை எங்கே கண்டு தேட

  • அதுதான் புரியவில்லை. சொல்லடி பராசக்தி'யை அனுப்பி யிருந்தபோது ஒரு விலாசத்தையும் குறிப்பிடவில்லை. சின்மா னத்தை எந்த விலாசத்துக்கு அனுப்புவதென்றும் புரியவில்லை. இனி ஏதாவது கதை வரும்போது, விலாசம் எழுதப்பட்டிருந்தால், நான் உங்களுக்குச் செய்தி அனுப்புகிறேன். நாம் இருவரும் போய்ப் பார்க்கவேண்டும். திருமணத்தின் உதயத்திலேயே குழப்ப மும் வேதனையும் ஏற்படுவதென்றால், பாவம் அழகிக்கு எப்படித் தான் மனசுக்கு நிம்மதி ஏற்பட முடியும்? கல்யாணக் கப்பல் புறப்பட்டுவிட்டது : வாழ்க்கைத் துறைதான் அப்படியே எஞ்சி நிற் கிறது !.படைத்தவனை நோவதைத் தவிர, எய்தவனேயோ அல்லது. அம்பையோ நோவதற்கு'நாம் யார்?’ என்று பொருள் பொதிந்த: