பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ஜாதி ரோஜா

சொற்களை நிதானமாக அளந்து சொன்னர் தமிழ்த் தொண்டு ‘ ஆசிரியர். x .

வார்த்தைக்கு வார்த்தை தலையை ஆட்டி ஆமோதிக்கும். கரிகாலன், எங்கேயோ பார்வையை ஆணியடித்து வைத்தபடி இருந்தான். அந்த ஒரு நாளில் அழகியைக் காப்பாற்றி அழைத்து விந்தபோது அவளது கழுத்திலே ஏற்பட்டிருந்த ஊமைக்காயங்களே எண்ணிப் பார்த்தான். மயக்கம் தரவல்ல அந்த ஒரு ரோஜாப், பூவின் சாகலத்தையும் நினைத்துப் பார்த்தான். . .

அப்பொழுது

  • மிஸ்டர் கரிகாலன், அப்படியென்றால் நான் புறப் படட்டுமா ?”
  • நல்லது. என்னுடைய சகோதரிக்கு விரைவில் லெட்டர் போடுவதாக அழகி ப்ோன மாதம் எழுதினர்கள்...கடிதம் வந்ததும், நான் உங்களை அவசியம் வந்து பார்க்கிறேன்.”

ஆசிரியர் பரிமேலழகரிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு, கரிகாலன் விட்டுக்குப் புறப்பட்டான். டக்கர் மாதாகோயிலில் பிரார்த்தனையில் சிலர் ஈடுபட்டிருந்தனர். அவன் திரும்பினன். அந்தி மயக்கத்தில்-தங்க வெயிலில் செம்புதாஸ் தெருகூடப் பார்ப் பதற்கு அழகாகத்தான் இருந்தது. -

ஊரிலிருந்து திரும்பிவிட்ட தன் அத்தானேக் கண்டதும், கரிகால னுக்குச் சந்தோஷம் தலைகால் புரியவில்லை.

என்ன மைத்துனர் லார், விசேஷம் ஏதாவது உண்டா ?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார் ராமலிங்கம்-சுசீலாவின் கணவர். . . . . . - , . .”

நீங்கள்தான் சொல்லவேண்டும். அத்தான் 1’ என்று. பல்யமாகக் கேட்டான் கரிகாலன், . -

அப்படியா ? இதோ நான் சொல்லிவிடுகிறேன். உன் அப்பா உனக்கு ஒரு பெண்ணைப் பார்த்து முடிவு செய்திருக்கிறார். அடுத்த வாரம் திருச்சிக்குப் பெண் பார்க்கப் போகவேனும்,’ என்றார் ராமலிங்கம். . . . .

கரிகாலன் இதை எப்படி எதிர்பார்த்திருப்பான் ? தன் 6ur ணத்திற்கு இப்போது அவசரம் இல்லையென்றுதான் முன்பே தெரி வித்து விட்டானே?...... : -