பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சிப் பெண் அழகி ! 41

தன்னுடைய இன்ப துன்பங்களிலே சமபங்கு பெற, எங்கோ பிறந்திருக்கும் எவளோ ஒருத்தியைப் பற்றிக் கற்பனை பண்ணினன். மங்கலான சித்திரங்கள் மாதிரி என்னென்னவோ பெண் உருவங் கள் தோன்றின. ஆளுல் அவையெல்லாவற்றையும் தூரத் தள்ளி விட்டு, ஓர் அழகுப் பதுமை தோன்றியது. மறுகணம், அவன் பயங்கரக் கனவு கண்டவன்போலத் திடுக்கிட்டான் : ஆ, அழகியா ?’ என்று அலறிஞன்.

அவனுக்கு உடம்பில், உள்ளத்தில், உணர்வில் ஏற்பட்ட பெரும் அதிர்ச்சி ஒருநிலைப்பட எட்டே எட்டு நிமிஷங்கள் போதுமா, என்ன

அப்பொழுது அங்கே வந்தாள் சுசீலா. ‘ தம்பி, காலேயிலே மயிலாப்பூருக்கு கபாலி கோயில் உற்சவத்துக்குப் போயிருந்தேன். நம்ப அழகியோட புருஷன் அழகேசன் ஜவுளிக் கடையிலே நேற்று ராத்திரி கொள்ளை போயிடுச்சாம். அதுமட்டுமா ? அழகிக்கு வந்த மயக்க நோய் கணக்கிலே அவருக்கும் வந்திருக்காம்!” என்றாள் அவள.

எவ்வித விளைவுமின்றி இருந்தான் கரிகாலன். கிழிக்கப்பட் டிருந்த ஒர் உறைக் கடிதத்தை அவனிடம் நீட்டினுள் சுசீலா. கடி தத்தைப் படித்து முடித்த கரிகாலன், அக்கா, இதைப் படிச்சிருப் பீங்களே ?. நம்பவே முடியலேயே ?... அழகி புதுமைப் பெண் என்று மட்டுந்தான் நான் கெனைச்சிருந்தேன். இப்போது புரட்சிப் பெண்ணுகவும் ஆகி விட்டாங்களே ?...” என்று சொல்லி நிறுத்தின்ை. -

தரையில் கழுவி ஓடிய அழகியின் அந்தக் கடிதத்தை எட்டிப் பிடிக்க ஓடிவந்த அந்த உருவத்தைக் கண்டதும், அடித்து வைக்கப் பட்ட சிலையானுன் கரிகாலன். -