பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ஜாதி ரோஜா

ஆசனத்திலிருந்து எழுந்து பின் பக்கம் திரும்பிளுள், மூன்றா வது வாசற்படியில் நின்ற ஒர் உருவத்தைப் பார்த்ததுதான தாமதம. அழகிக்குத் தல சுற்றியது.

அவள் பார்த்த உருவம் வேறு யாருமல்ல-சாட்சாத் திருவா ளர் அழகேசன் !

‘போகலாமா அழகி ?’ என்று கேட்டபடி, சுசீலாவும் நர்ஸ் தாமரையும் வந்தார்கள், -

“ஓ...போகவேண்டியதுதான்...இந்த செக்கை நீங்களே வைத் துக் கொள்ளுங்கள், அக்கர்!’ என்று சொல்லிப்_பரிசை சுசீலா விடம் சேர்ப்பித்த பிறகு, மேடையின் பாதத்தில் போய் நின்றாள். ஆசிரியரிடம் விடை பெற்றாள். சிவப்பு ரோஜா இதழ்கள் இரண் டை உதட்டு நுனியில்வைத்து மென்ற வ்ண்ண்ம். நாலு பக்கங்களி லும் பார்வையை நழுவவிட்டவளாக மெல்ல நடந்து வந்தாள் அழகி.

மூவரும் புறப்பட்டார்கள். அழகியின் மனம் மாத்திரம் டக்டக்கென்று அடித்துக்கொண்

அரமனைக்கரத் தெருவில் கச்சாலீஸ்வரர் சந்நிதியைத் தாண்டி ஞர்கள். அழகியின் இடது காலில் முள் குத்தி விட்டது. பின் தங்க வேண்டியவளாளுள் அழகி , சுசீலா, தாமரை இருவரும் கொஞ்சம் முன்னே நடந்தார்கள். -

முள்ளே எடுத்துவிட்டுத் திரும்பின வேகத்தில், எதிர்ச் சந்தில் மடங்கித் திரும்பி வந்த அந்தப் பிளஷரை அழகி கவனிக்க முடிய வில்லை. கார்மீது மோதிய அவள், மறுகணம் நினைவு தப்பித் தரை யில் சாய்ந்து விட்டாள். -

‘அழகி ‘ எனறு கூப்பிட்டுக் கொண்டே திரும்பி வந்த சுசி லாவும் செந்தாமரையும் அழகியின் அவல நிலையைக் கண்டதும், பதை பதைத்துப் போய் விட்டார்கள்.

அதே சமயம்"ஐயோ, என்னுடைய அழகியா ?’ என்ற வார்த்தைகளுடன் காரிலிருந்து இறங்கி வந்த அவ்வுருவத்தைப் பார்த்ததும், பெண்கள் இருவரும் பெண்பதுமைகளாயினர். அழகேசன்...’ என்ற குரல் கள் புறப்பட்டன, - - “. . . . . . . . . . .

அழகியின் நெற்றி, மூக்கு, கண் இவற்றிலெல்லாம் ரத்தம் ஒழுகிக்கொண்டிருந்தது. -