பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. அந்தி நிலாவும் அந்தி நிலாவும் !

‘தமிழ்த் தொண்டு’ பத்திரிகை நடத்திய நாவல் போட்டியின் பரிசளிப்பு வைபவம் தமிழ்த் திருவிழாவைப்போல அப்படி விமரி சையாகக் கொண்டாடப்பட்டது. பத்திரிகையாளர்கள், ஆசிரியர் கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், நட்சத்திரங்கள் இவ்வாறு இலக் கியத்தையும் கலையையும் இணைத்துப் பார்க்கும் பிரமுகர்கள் பலர் வந்திருந்தனர். ஜே.ஜே என்றிருந்தது அரண்மனைக்காரத் தெரு. தமிழ்த்தொண்டு ஆசிரியர் பரிமேலழகர், பரிசுபெற்ற நாவலா சிரியையை அறிமுகம் செய்தார் ; கல்வி அமைச்சர் பரிசு வழங் கினர்.

கையிலிருந்த ரோஜாமாலே உதிர்த்துவிட்ட இதழ்கள் சில ‘ஜிகினு’க் கம்பிகளில் செப்பிடுவித்தை செய்து கொண்டிருந்தன. “அந்திகிலா பரிசு பெற்ற ஐயாயிர ரூபாய்க்குரிய செக் அழகியின் இடது கையில் பத்திரமாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.

சுசீலா, செந்தாமரை இருவரும் பின்பக்கத்தில் அமர்ந்திருந் தார்கள் : அடிக்கொருதரம் அவர்கள் அழகியைப் பார்ப்பதும் சிரிப் பதுமாக இருந்தார்கள். *

முன்வரிசை ஆசனத்தில் இருந்த பணக்கார அம்மணி ஒருத்தி வெளியேறினுள். அந்த இடத்தில் வேறு பெண் உட்காரலாஞள். “அழகி, என் வாழ்த்துக்கள் ‘ என்ற குரல் கேட்டு வலது பக்கமாகத் திரும்பினுள். அவள் அழகியின் பள்ளித்தோழி. பெயர் சூடாமணி ; நல்ல பெண், கெட்டிக்காரி. -

  • & அழகி, உன் கல்யாண விவரத்தை பத்திரிகையில் நீ போட் டிருந்த போட்டோவைக் கண்டதும்தான் அறிந்து கொண்டேன் ; ஆமாம், உன் புருஷன் உன்னோடு வரவில்லையா ?...”

‘சூடா, அவருக்குக் கொஞ்சநாளாக உடம்பு குணமில்லை...” என்றாள் அழகி, தாழ்.குரலில். - -

சீன வெடி வெடித்தது போல கைதட்டல் எழுந்தது. ‘வாழிய செந்தமிழ்! வாழ்க கற்றமிழர் வாழிய, பாரத மணித் திருநாடு ‘