பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 - ஜாதி ரோஜா

டாக்டருக்கு போன் செய்; அல்லது காரை எடுத்துகொண்டு போய்க் கையுடன் அழைத்துவா. ஒடு’ என்று உத்தர விட்டார் பெரியவர். உடலின் தளர்ச்சி குரலில் இல்லை. நடந்து வந்த பாதை யின் பழைய முட்பாதை ஒவ்வொரு மைல் கல்லாக அவருடைய கெஞ்சிலும் நினைவிலும் தோன்றி உறுத்திக்கொண்டிருந்தது. ரத்தக் கண்ணிர்த்துளிகள் வழிந்தோடின.

கையில் வைத்திருந்த வெள்ளிப் பூண் பிரம்பு கை கழுவியதுகூட அவருக்கு நினைவில்லை. கட்டிலின் அருகிருந்த் நாற் காலியில் அமர்ந்தவாறு, தன் மருமகளே விழி வலிக்க, நெஞ்சு இனிக் கப் பார்த்துக் கொண்டிருந்தார் முதியவர் சோமநாதன்.

டெலிபோனில் எண்கள் திருப்பப்படும் ஓசை கிழவருக்கு நிம் மதி தந்தது. * . -

மங்கிய நிலவு உறங்கிக்கொண்டிருந்தது; வாடியரோஜா துயில் வளர்ந்து கொண்டிருந்தது; இசை கூட்டும் எழில் யாழ் நாதம் பரப்ப விருப்பமற்று, பஞ்சு மெத்தையில் தஞ்சம் அடைந்திருந்தது.

சோமநாதனுக்கு, உலகம் என்ற ஒன்று இருக்கிறது என்னும் ஞாபகங்கூட் உதிக்கவில்லை. மனத்தில் கிம்மதி கிரம்பி வழியும் போது, மனிதனுக்கு உலகம் மட்டுமென்ன, உலகத்தைப் படைத்த அலகிலா விளையாட்டுடையானைப்பற்றிக் கூடச் சிந்தனே பிறப்பது கிடையாது. ஒரு விடிை, அப்படிப்பட்ட மன நிலைதான் உருவாகி யிருந்தது. பொழுது விடிந்து பொழுது போனதும், கற்பகாம் பிகே, என் மருமகளே என் மகனிடம் கொண்டுவந்து சேர்த்துவிடு. உனக்குத் தேளுபிஷேகம், பாலாபிஷேகம் செய்கிறேன். சந்தனக் காப்பு சாத்துகிறேன்; தங்கக் கண் மலர் செய்து அணிவிக்கிறேன்’ என்று வேண்டுதல் விடுத்துக்கொண்ட அவர், அப்பொழுது தெய் வத்திற்கு நன்றி செலுத்த ஏனே மறந்து விட்டார். - -

அம்பிகை சுவரில் இருந்தாள். கிழவர் விழிப்புப் பெற்றார். ஓடினர்; தண்டனிட்டு விழுந்தார். அழுதார், அழுதார், அப்ப்டி அழுதார்; “தாயே, நீ கண்கண்ட தெய்வம். என் மருமகளே என் மக னிடமிருந்து மறுபடியும் பிரித்து வைத்துவிட மாட்டாயே?...அழ கிக்கு நல்ல மனசைக் கொடு!...உன்னுடைய திருவாசலுக்கு நாங் கள்-நான், என் மகன், என் மருமகள் மூன்று பேரும் வந்து திரு விளக்கு ஏற்றி வைத்து மகிழ அனுக்கிரகம் செய், அம்மா’ என்று புலம்பிஞர். - o . . . . . . “

இரவுப் பூஜை நடந்து கொண்டிருந்தது, கபாலீஸ்வரர் கோயி லில் மணி ஒலித்தது. ஆஹா, தாயே! நல்ல சகுனம் காட்டு கிருயா?.ஆஹா!’ என்று மெய்ம்மறந்து பேசினர்-தனக்கு மட்டும்