பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“எனக்கு நானே விடுகதை ஆனேன்!” 87

கேட்கும்படியாக-அல்ல, தனக்கு இவ்வளவு சந்தோஷத்தை

வாரிக்கொடுத்த தெய்வத் தாய்க்கும் கேட்கும்படியாகப் பேசினர்.

நிலைப்படியில் ஒற்றைக் காலால் நின்று கொண்டிருந்தவேலைக் காரி வள்ளி, வெளி வாசலில் வந்து நின்ற காரைக் கண்டவுடன் இரட்டைக் காலால் நடந்துபோய் டாக்டருடைய மருந்துப் பையை வாங்கினுள். அழகேசன் டாக்டரை வரவேற்றான். - -

துன்னே மறந்தோ, மறக்காமலோ-அல்லது மறக்க முடியா மலேர் துயில் புரிந்து கொண்டிருந்த ஓர் உள்ளத்திற்காக நான்கு உள்ளங்கள் கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றிக்கொண்டு கண்காணித்து வந்தன.

நாடிக்குழல், ஒரு மடக்கு மருந்து, இஞ்செக்ஷன், இரண்டு மாத்திரைகள் அனைத்தும் மந்திராலோசனை செய்தன; வாதப் பிரதிவாதம் நடந்தது; கருவுற்ற திட்டம் உருப்பெற்றது. சபாஷ், வெற்றி!’ என்று கொக்கரித்தன. அவை. . . . . -

கடிகார முள்ளின் முனையில் தங்கள் இதயங்களைத் தொங்கச் செய்து, கண்களை அழகியின் கண்களில் பொருத்திவிட்டு, ஆதர வற்றவர்கள் போல-அணுதைகள் போல கிருை கல-து. தையும் தனயனும். . . .

வாரிச் சுருட்டிக் கொண்டு படுக்கையை விட்டெழுந்தாள் கதாசிரியை திருமதி அழகி. சுசீலா அக்கா, செந்தாமரை” என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டாள். சுற்று முற்றும் கண்களைத் தேடச் சொன்னுள். காணவில்லை! என்ற ஒரு வரி விளம்பரத்தை அவளுடைய மனப்பத்திரிகை படித்தது.

  • அழகி, நீ உன் வீட்டில்தான் அம்மா இருக்கிறாய் ‘ என்றார் சோமநாதன், கண்ணுடியைச் சரியாகப் பொருத்திக்கொண்டு.

“ஐயோ, சிங்கத்தின் குகைக்கு மறுபடியும் வந்துவிட்டேன ? என்ன விந்தை என் வீடாமே ! யார், எப்போது ஏன் கட்டித் தங் தார்கள் ? தன்னுடன் ஸ்கிப்பிங் விளையாட்டு விளையாட விதி அழைத்தது ; நான் மறுத்தேன். அதற்குப் பழி வாங்கவா அது இப்படி இங்கே என்னைத் தள்ளிவிட்டிருக்கிறது ...இதயத்தை விலைகொடுத்து வாங்கவேண்டிய நிலையில் தங்களைப் பக்குவப் படுத்திக் கொண்டிருக்கிறவர்களிடமா நான் அடைக்கலம் புகுந்தி ருக்கிறேன் ? அடைக்கலமா ?... என்ன சோதனை இது..? ஏதோ சூது நடந்திருக்கிறது. அழகேசன் தான் எல்லா சாகஸச் செயல்களிலும் வல்லமை படைத்தவராமே திருமணப் பந்தலி லேயே என்னை மயங்கச் செய்வதற்கு, மயக்கும் ரோஜாப்பூவை