பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ஜாதி ரோஜா

நாடி என்னையே ரசாயன மாற்றம் செய்யத் துணிந்த புண்ணிய வானுயிற்றே ஆவர் 1. அந்த ஆறு புகைப்படங்கள் போட்ட விடு கதைகளுக்கு இத்தனை நாள்ாகியும் இன்னமும் என்னுல் விடை காண்முடியவில்லையே ? என்னைப் படைத்தவன் விடுகதையாகி விட்டன், வேலி கட்டி சுற்றும் உலகம் விடுகதை ஆகிவிட்டது. என் கைத் தலம் பற்றியவர் விடுகதை ஆகிவிட்டார்; ஏன், எனக்கு, நானே விடுகதையாகி விட்டேன் ; ஆக்கிக்கொண்டு விட்டேன் : அல்ல, ஆக்கப்பட்டு விட்டேன் !’ -

எள்ளத்தனை பொழுதில் ஒராயிரம் நினைவுகள் புயல் வேகத் தில் புறப்பட்டுச் சீறின ; சிரித்தன !

நட்சத்திரக் குழந்தைகள் ஆடிய பின்னல் கோலாட்ட விளை யாட்டுக்கு நிலவுச் சிறுமி இங்கிலீஷ் ட்யூன் அமைத்துப் பின் பாட்டுப் பாடிக் கொண்டிருந்தாள். -

புடைத்தெழுந்தன நரம்புகள். தலையைப் பிடித்துக்கொண்டு. அப்படியே உட்கள்ர்ந்திருந்தாள் அழகி. ஒரு சில நிமிஷங்களை இறந்த காலமர்க்கிய பிறகு, அவள் தலையை நிமிர்த்தினள். படுக்கையைப் பிரிந்து எழுந்தாள். - • * ,

அழகி என்று அழைத்தபடி, அவளே நெருங்கிளுன் அழகே Ff,

அவள் நிற்க வில்லை.

அம்மா அழகி போய்விட்டாயாளுல் என் உயிரும் போய். விடும்” என்று கெஞ்சிய வாறு ஓட முடியாமல் தொடர்ந்தார் சோமநாதன். -

வெளிக் கதவைத் திறந்துகொண்டு வெளியேற முதல் அடி எடுத்து வைத்தாள் அழகி.

க.அழகி...அம்மா அழகி... ‘ கண்ணிரைப் பாத காணிக்கையாக வைத்து, புவிகாக்கும் உலக மாதாவாக அவளே ஆக்க எத்தனிக்க வில்லே கிழவர் ; கண் னில்ை அவளுடைய கல் நெஞ்சைக் கரைத்து மனித உணர்ச்சி யைச் சுண்டிவிட்த்தான் நினைத்தார் அவர்-அழகேசனின் தந்தை.

ஐயோ! நான் உங்கள் மருமகள் எழுந்திருங்கள்... யாராவது Li, என்னைத் திட்டுவார்கள்...! உயிர் j. பேர்க்ட்டும்; உங்கள் உயிர் போகவிடவேமாட்டேன். எழுந்திருங். கள் மாமா...எழுந்திருங்கள் ‘ என்று விம்மினுள் அழகி.