பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. ஆம்; அழகிக்கு ஓர் அயோத்தி !

அழகுச் சாதனங்கள் என்றென்றும் மனத்திற்கு ஆனந்தம் தரு பவை. கண்ணுடிப் பெட்டியில் நிறைந்திருந்த தண்ணிரில் மேலும் கீழுமாக ஒடியாடி நீந்திக்கொண்டிருந்தது பெரியமீன் ஒன்று. பச்சை, சிவப்பு போன்ற அதன் மாறுபட்ட் நிறங்களையும், அது உணவு உண்ணும் அழகையும் வெகு நேரம் பார்த்து ரசித்துக்கொண்டிருந் தாள் அழகி.

‘அம்மா, காப்பி பலகாரம் சாப்பிடுங்கம்மா!’ என்று உபசாரம் செய்தாள் வள்ளி.

பலகாரத் தட்டை எடுத்து வந்து, தரைமீது விரிக்கப்பட்டிருந்த செட்டிநாட்டு வர்ணப் பாயில் வைத்தவாறு உட்கார்ந்தாள் அழகி. வெள்ளித் தம்ளரில் தண்ணிர் கிறைத்து வைத்தாள் வள்ளி.

ஒரு நினைவு எழுந்தது.

தன் நிலைமையையும் அந்த மீனின் நிலைமையையும் ஒப்பிட்டுப் பார்த்தாள் அழகி. அவளுக்குச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அவளுக்கும் உணவு கிடைக்கிறது; அதற்கும் உணவு கிடைக் கிறது; அவளுக்கும் அரண் இருக்கிறது ; அதற்கும் இருக்கிறது : அந்த அரனேயும் மீறிய ஒரு தூண்டில் அவளைப் பிடிக்கக் காத் திருக்கிறது; மீனுக்கும் அத்தகைய சங்கடம் உண்டு. அதற்கு விடுதலை இல்லை; அவளுக்கும் விடுதலை கிடையாதா ? கிடை யவே இடையாதா ?

உணவு கொள்ளவில்லை; இன்று மட்டுந்தான ? அழகேசன் விலாசத்தின் காற்று மேனியில் படிந்த கடந்த ஏழெட்டு நாட்க ளாகவே உற்சாகம் சிறிதுமின்றிக் காணப்பட்டாள் அவள். கொண் டவன் இருக்கும் இடமாயிற்றே அது ?. நீராமபிரான் இருக்கும் இடங்தானே சீதைக்கு அயோத்தி ? ஆளுல்...? அழகேசன் அந்தப் புராண புருஷனின் நிழலிலாவது ஒதுங்க முடியுமா ?... அவன் பெயரை மனத்தால் தீண்டி, நினைவால் உறவாடி, நெஞ் சில் நிறைத்துக் கொள்ளவாவது அழகேசன் எத்தனம் செய்ய முடியுமா ? . . “ “ -

சோமநாதன் வந்தார். மாமனுரைக் கண்டவுடன், இட்டிலித் துண்டுகளைத் தொண்டைக் குழிக்குள் வேகமாகத் திணித்தாள் மருமகள். * “ “

6