பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 ஜாதி ரோஜா

  • சாப்பிட்டிட்டியா, அம்மா ? ? ஆமாங்க...நீங்க... * *
  • நீ சாப்பிட்டதும், வழக்கம்போலே உன் கையாலேயே பல காரம் கொண்டு வாம்மா. இந்த ஏழெட்டு நாளாகத்தான் நான் வாய்க்கு ருசியாக என்னமோ சாப்பிடறேன், என்று உள்ளம் திறந்து, கண் மூடிப் பேசினர் அவர். கண்ணிரை அழகி கண்டு விடக் கூடாது என்ற நினைவு அவருக்கு.

வள்ளி பலகாரம் தயாரித்து வந்தாள். வள்ளியின் பதவியை ஏற்றாள் அழகி. சோமநாதன் ருசி பார்த்து அனுபவித்துச் சாட்ட Jk

  • நீ மாடிக்குப் போ, அம்மா. உன் எழுத்து வேலையைப் பார். என்ன யோசிக்கிறாய் ?. அழகேசன் உன் கண்ணில் படவே மாட்டான்-பயப்பட்ாதே ! உன் விருப்பத்திற்கு விரோதமாக எந்த ஒரு சிறு காரியமும் நடக்க நான் சம்மதிக்க மாட்டேன்.’’ என்றார் பெரியவர்.

அழகி சிசிப்பைப் பதிலாக்கி நன்றி சொல்லிய பிறகு, கூடத் தைக் கடந்து மாடிப் படி நோக்கிக் குறி வைத்தாள். கண் கொத்திப் பாம்பு ஏதாவது சுவரிடுக்கில் தலைநீட்டிப் பார்க்கிறதா என்பதை அறியவே அந்தக் குறி வைக்கப்பட்டது. நல்ல வேளை, அந்தப் புண்ணியவானக் காணுேம் !” என்றெண்ணி, மனத்தில் நிம்மதிக் குத் திசை காட்டியவாறு மாடிப்படி ஏறிப் போனுள்.

அப்பொழுது, அழகி !...” என்ற குரல் கிணற்றடியிலிருந்து செத்து மடிந்து கேட்பது போல ஒலித்தது. யார் வள்ளியா? இல்லை, சோமநாதன ?. இல்லை, இல்லை அதோ அந்தக் கண்கொத்திப் பாம்பு, !-அதோ, அந்தப் புண்ணியவான் !-ஆமாம், திருவாளர் அழகேசன் ! -

அழகி திரும்பினள். அவளுடைய பிம்பத்தைப் படம் பிடித்துக் காட்டிய நிலைக் கண்ணுடியில் தன் உள்ளத்தோடு உருவத்தையும் ஒட்டிப் பார்த்தாள். ஒட்டும் இரண்டு உள்ளங்களையாகண்டாள்? ஏப்படிக் காண்பாள் ? காணுதல்தான் சாத்தியமா?. ஒரே ஒரு நெஞ்சத்தை மட்டும்தான் அவளால் காண முடிந்தது , ஒரே ஒரு பிம்பத்தை மாத்திரம்தான் காண முடிந்தது. அது அழகேசனுடைய தாக எப்படி இருக்க முடியும்? முடியாது, முடியவே முடியாது 1, ஆனபோட்டுத் தடுக்கப்பட்ட அகழியில் பொங்கிப் புரளும் புது வெள்ளத்தின் சுழிப்பை, தாபத்தை, தாகத்தைத்தான் அவள் தன் னுள்-தன்னில் கண்டாள். அந்த நிலையை எக்ஸ்ரே பிடித்துக்