உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜியார்டனோ புரூனோ.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரா. நெடுஞ்செழியன் எம்.ஏ.

9


அவனை அந்த வழியினின்றும் தடுத்து நிறுத்த முயன்றார். மாதா கோவிலையும், மத நூலையும்: ஒருவன் ஐயப்படுகிறான் என்றால், அவனுக்கு அக்காலம். கொடுத்த பரிசுகள் சிறைத் தண்டனை, சித்ரவதை, வெட்டி வீழ்த்துதல், வெந்தழலில் பொசுக்குதல் போன்றவைகளாகும். ஆனால், புரூனோ தன் போக்கை மாற்.றிக் கொள்ளாமலே, அந்தப் போக்கிலே மிக உன்னிப்பாக நின்றான்.

ஆன்செல்ம் பாதிரியார், “என் அருமை மகனே! மகனே! நீ அதிகமாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறாய். கணக்கு வழக்கற்ற கேள்விகளைக் கேட்பதும், எழுதி வைக்கப்பட்டவைகளை மீற நினைப்பதும் தொல்லை தருவனவாகும். வேத .நூல்களைப் படி; நீ சொல்ல வேண்டிய மந்தரங்களைச் சொல்லு; கோபர்னிக்கஸையும் அவருடைய கனவுகளையும் ஒதுக்கித் தள்ளு! அசைக்க முடியாதபடி, உலகை ஆண்டவன் நிலை நிறுத்தி வைத்திருக்கிறார் என்பதைப் புனித வேதம் அழுத்தந்திருத்தமாகச் சொல்லவில்லையா?. ஞாயிற்றை அப்படியே நிற்கும்படி ஜோஹுவா கட்டளையிடவில்லையா? ஞாயிறு அப்படியே நிற்கிறது என்றால், அ.து கோபர்னிக்கஸின் கருத்துப்படி . தவறுடையதல்லவா? ஜியார்டனோ! என் மைந்தா! நீ மிக்க அக்கறை எடுத்துக் கொள்ளாவிட்டால்,. உன்னுடைய கேள்விகள் உன்னை ஒரு மத விரோதியாகக் காட்டி விடும். குற்றங்காணும் குருமார்களின் குழு, நானே உனக்குச் சலுகை காட்டுவதாக எண்ணி விடும்” என்று புரூனோவிடம் உருக்கமாகக் கூறினார்.

புரூனோ அந்தப் பாதிரியாரின் கைகளைப் பிடித்து முத்தமிட்டு, . அவர் ஆறுதல் பெறும் வண்ணம் சில சொற்கள் சொல்லுவான். அவன் தன் அறைக்குச் சென்றதும், மேலும் கீழுமாக உலாவுவான்; சிந்திப்பான்; ஆராய்வான்; வியப்படைவான்; வெளியேறி