உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜியார்டனோ புரூனோ.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 ஜியார்டனோ புருனோ செய்யட்டும் என்னை வேண்டுமானால் திட்டிவிட்டுப் போகட்டும். அதற்காக நீங்கள் வருந்தவோ சினந்து கொள்ளவோ செய்யாதீர்கள். அம்மா!" என்று சிரித்துக்கொண்டே கூறினான். உடனே தாயைக் கட்டிக் கொண்டு, முத்தமிட்டு அவள் கண்ணீரைத் துடைத் தான். தாயும் மகனின் முடிவுக்கு இசைந்தாள். வருத் தத்தோடு ஆனால் பெருமிதத்தோடு மகனை மடாலயத் திற்கு அனுப்பிவைத்தாள். செயின்ட் டாமினிக் மடாலயத்தில் புகுந்ததும் மிக ஆவலோடும், மும்முரத்தோடும் மதநூல்களையும் பிற நூல்களையும் படிக்கத் தொடங்கினான்.பா திரியாராவதற் கான படிப்பைச் சில ஆண்டுகளில் முடித்த பிறகு மடத்தின் ஒழுங்குமுறைப்படி நடப்பதாக உறுதிமொழி அளித்து, குருமாரின் நீண்ட அங்கியை அணிந்து கொண்டான். புரூனோவிடம் அன்பு காட்டி, அவனை ஆதரித்துவந்த ஆன்செல்ம் பாதிரியார், புரூனோவின் அறிவின் தெளிவையும், கருத்தாழத்தையும். கண்டு வியந்தார் என்றாலும், அவனுடைய பாதிரிக்குல்லாயின் கீழே இருக்கும் அவனது மூளை வாளாக்கிடக்கா து என்றும், அந்த வலியுள்ள மூளை அவனுக்கே தொல்லை பல விளைவிக்கும் என்றும் எண்ணி அடிக்கடி பெருமூச் செறிந்து வந்தார். புரூனோ மதக் கருத்துக்கள் பற்றிப் பல கேள்விகள் கேட்பான்; அவற்றிற்கு அறிவுக்கொத்த விடைகள் வராதவரையில் விடமாட்டான். ரோம் பழகிக் கொடுத்த பழக்கவழக்கங்களையும், மாதாகோயில் கற்றுக்கொடுத்த கொள்கைகளையும் அப்படியே ஏற்றுக் கொள்ள மறுத்து, அவைபற்றியும் கேள்விகள் கேட்கத் தொடங்கினான். பழைய கொள்கைகளையும், உண்மை களையும் ஐயப்படுவதே ஐயப்படுவதே 'பாபம் என்பதை அவன் கடைபிடிக்கவில்லை. அவன் நாளடைவில் "நாஸ்" திகன் ' என்று கூறப்பட்டு, கொடுமைக்கு ஆளாக்கப் படுவானோ என்பதை நினைத்து, ஆன்செல்ம் பாதிரியார்