உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜியார்டனோ புரூனோ.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரா. நெடுஞ்செழியன் எம்.ஏ. 7 வும் வலியுள்ளவனாகவும் ஆன ஒரு இளைஞனாக இருப் பதால், நீ அழுந்திக்கிடக்கும் நூல்களைத் தூக்கி எறிந்து விட்டு, ஒரு வீர இளைஞனுக்கு அழகான போர்க்கருவி களைத் தாங்கவேண்டுமென்று அவர் சொல்லிப்போனார்" என்று இளகிய மனதுடன் கூறினாள். 24 அதுகேட்ட புரூனோ, அம்மா! நான் போர்க் கருவிகளை ஒருநாளும் ஏந்தமாட்டேன். சோம்பேறி களாய் இருக்கும் சில சீமான்களின் கட்டளையை ஏற்று, என்னைச் சேர்ந்த மக்களைக் கொள்ளையிடவோ, கொலை | செய்யவோ ஒருக்காலும் ஒருப்படேன், நான் மாதா கோவில் மடத்தில் சேர்ந்து, மதச்சீடனாகத் தீர்மானித்து விட்டேன். ஆன்செல்ம் பாதிரியார் எனக்குக் கல்வி கற்றுக்கொடுக்கவும், பயிற்சி தரவும் இசைந்துள்ளார். நானும் மடத்தின் ஒழுங்கு முறைப்படி நடக்க உறுதி மொழி அளிப்பதாகக் கூறிவிட்டேன். இரும்புக் கவச மும், கத்தியும், கேடயமும் தாங்கிப், போர்க்களம் புகுந்து. யாருக்கும் ஒரு தீங்கும் செய்யாத ஏழை எளிய வர்களைக் கொன்று குவிப்பதைவிட, அறிஞர்கள் எழுதிய நூல்களைப் படித்தறிவதும், கற்றுத் தேர்வதும் நல்ல தொரு வாழ்க்கை என்றே கருதுகிறேன் 59 "என் அருமை கண்ணே ! உன் சிற்றப்பா ! உன் சிற்றப்பா அல்லவா அழைக்கிறார்!" என்று அஞ்சிய குரலில் தாய் மறுமொழி கூறினாள். புரூனோ, தெருவில் திரிவதைவிட, படிப்பதிலே கவலை செலுத்துவதையே அவள் அடிக்கடி அறிந்திருந்தாளாதலின், புரூனோவின் சொற்கேட்டு அவள் அதிர்ச்சியடையவதில்லை. தந்தை யற்ற மகனுக்கு, அவனது சிற்றப்பாவால் என்ன கேடு விளையுமோ என்று எண்ணி ஏங்கினாள் தாய். தாயின் நிலைகண்ட புரூனோ. "என் சிற்றப்பா அவர் விருப்பப்படி வேண்டுமானால் அவரே சண்டை