பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

வட ஆற்காடு ஜில்லா

வட ஆற்காடு ஜில்லாவில் மிகவும் விசாலமானது கிழக்குத் தொடர்ச்சிமலையே யெனினும் மிகவும் உன்னதமானது ஜவ்வாதுக் குன்றுகளே. அவைகளின் சிகரங்களில் சில 3000-அடி உயரம்கூட உயர்ந்துள்ளன. இக்குன்றுகள் இந்த ஜில்லாவின் தென் மேற்கி லிருக்கின்றன. இவைகள் கிழக்கு மலைத் தொடர்ச்சியிலிருந்து அகன்ற கணியம்பாடிப் பள்ளத்தாக்கினால் பிரிக்கப்பட் டிருக்கின்றன. இந்த வாணியம்பாடிப் பள்ளத்தாக்கு ஆம்பூருக்கருகில் குறுகிப் போகிறது. அங்கு ஜவ்வாது மலைத் தொடரும் அனேகமாய் ஒன்று சேர்ந்தது போல் ஏற்பட்டு விடுகின்றன. பிறகு அது ஜில்லாவை விடுகையில் பெரிதாகி சேலம் ஜில்லாவிற்குட் செல்கிறது. முன் சேலம் ஜில்லாவிற்குச் சேர்ந்திருந்த ஜவ்வாதுத் தொடரின் ஒரு பாகம் 1885-வது வருஷத்தில் வட ஆற்காடு ஜில்லாவுக்கு மாற்றிவிடப் பட்டது. இந்த ஜவ்வாதுக் குன்றுகள் தேக ஆரோக்கியம் வாய்ந்துள்ளவைகள் அல்ல. இவைகளின் தொடர்ச்சி வட கிழக்காக வேலூர் வரைக்கும் சென்றிருக்கிறது. இங்குள்ள 2,743-அடி உயரம் வாய்ந்துள்ள "கைலாஸ துர்க்கம்" என்ற இடம் ஒரு பிரிந்துள்ள சிகரம் இது வேலூருக்கு ஆறுமைல் தூரத்தில் உள்ளது. இதன் உச்சியில் ஒரு சிறிய பங்களா அமைக்கப்பட் டிருக்கிறது. கோடைகாலங்களில் அங்கு சென்றிருந்தால் இன்பமாகவிருக்கும்.

இந்த ஜவ்வாது மலைகளில் நேர்த்தியான காடுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் தென் மேற்கு இருப்புப்பாதை போடப்பட்ட காலத்தில் உபயோகப்படுத்திக் கொள்ள