பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூர்வ பீடிகை (அமைப்பு முதலிய விவரங்கள்)

7

கிளம்பிர் சித்தூர் ஜில்லா காளஹஸ்தி ஜமீன்தாரியிலிருந்து நெல்லூரில் பிரவேசிக்கும் வரை வட கிழக்காகச் செல்கிறது. இத்தொடர்ச்சி தான் இரு கர்நாடகங்க ளெனப்படும். "பாலாகாட்" அல்லது மைசூர் பீடபூமி என்ற பாகத்தையும் "பயன்சாட்" அல்லது சுத்த நாடு என்ற பாகத்தையும் பிரிக்கிறதாம். இந்த வட ஆற்காடு ஜில்லாவின் இந்த பாகம் சமுத்திர மட்டத்திற்கு 2,500-அடி உயரமுள்ளது. பூமி இங்கு செழுமையான தெனினும் காயலா ஸ்தலமென்று ஏற்படுவதால அதிக ஜன நெருக்கம் இல்லை. கீழே உள்ள தாலூகாக்களிலிருந்து மேலாக உள்ள தாலூகாகளுக்குப் போக அனேகம் மலைக் கண் வாய்களிருந்தாலும் வண்டிகள் போகக்கூடியவை கல்லூர், மொகிலி, செய்னகுந்தா இந்த மூன்று கணவாய்களே.

சந்திரகிரி தாலூக்காவி லுள்ள கல்லூர் கணவாய் கல்லூர் பாளையத்தின் வழியாகக் கடப்பைப் பியலூர்த் தாலூகாவிற்கு தாமல்செருவு பள்ளத்தாக்கை ஒட்டிச் சென்றிருக்கிறது. அதன் வழியாகச் சென்னையிலிருந்து கடப்பைக்குப் போகும் பிரதான ரஸ்தா செல்கிறது. இதன் வழியாகப் போக்கு வரவு மிக அதிகம். ஆயினும் பக்கத்திய ஜில்லாக்களுள் சாமான்கள் கொண்டு போக இருப்புப்பாதை ஏற்படுமுன் ஏற்பட்டிருந்த போக்கு வரவு இப்பொழு தில்லை. செய்னகுந்தாக் கணவாய் குடியாத்தம் தாலூகாவிலிருந்து பழமானேரிக்குச் செல்கிறது. அங்கு அது மொகிலியிலிருந்து வரும் ரஸ்தாவுடன் சேர்கிறது. பாதை செங்குத்தானதே யெனினும் அழகிய காட்சி வாய்ந்துள்ளது.