பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

வட ஆற்காடு ஜில்லா

தில் கடப்பையி லிருந்து வட ஆற்காட்டுக்கு மாற்றப் பட்டது. ஆவல்கொண்டா, தேசூர் ஜமீன்தாரிகள் முறையே 1848, 1826 இவ்வருஷங்களில் திரும்பவும் நிர்ணயித்துச் கொள்ளப்பட்டன. மாமண்டூர், கிருஷ்ணாபுரம் பாளையங்கள் மறுபடியும் ஏற்பட்டது சுமார் 1826-ல். தற்காலத்திலுள்ள வட ஆற்காடு ஜில்லாவிலுள்ளது கங்குந்தி ஜமீனும் ஆரணி ஜாகீருமே, மற்றவைகள் சித்தூர் ஜில்லாவுடன் சேர்ந்து விட்டன.

1860-வது வருஷத்தில் இந்த ஜில்லாவின் தாலூகாக்கள் ஒன்பதாக வரையறுத்து ஏற்படுத்தப் பட்டன. அத்தாலூகாக்கள்: (1) சந்திரகிரி (2) சித்தூர் (3) பழமானேரி (4) வாலாஜா (5) குடியாத்தம் (6) வேலூர் (7) போளூர் (8) வந்தவாசி (9) ஆற்காடு.

இந்த ஜில்லாவிலுள்ள மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைகளே. இவைகள் இந்த ஜில்லாவின் தென்மேற்கிலுள்ள கங்குந்தி ஜமீன்தாரியில் பிரவேசித்து வடக்கு நோக்கிச்சென்று கொஞ்ச கொஞ்சமாய்ச் சித்தூர் ஜில்லாவைச்சேர்ந்த திருப்பதிக் குன்றுகள் வரை கிழக்கு நோக்கி சென்றிருக்கின்றன. இங்கு இம்மலைத் தொடர்ச்சி கரகம்பாடி, மாமண்டூர் கிராமங்கள் வழியாக வடக்கு நோக்கிக் கடப்பை ஜில்லாவில் போகும் ஒரு நீண்ட பள்ளத் தாக்கினால் பிளக்கப்பட் டிருப்பது காணப்படும். இந்த மலைத் தொடரில் ஏற்பட்டுள்ள இடைவெளியின் வழியாகத்தான் கடப்பை ஜில்லாவிற்குள் சென்னை இருப்புப் பாதையின் வடமேற்குக் கிளை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மாமண்டூர் பள்ளத் தாக்கின் கிழக்கில் மலைத்தொடர்ச்சி மறுபடியும்