பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூர்வ பீடிகை (அமைப்பு முதலிய விவரங்கள்)

5

பட்டன. பாலாற்றிற்குத் தெற்காகவுள்ள ஐந்து தாலூகாக்களும், ஆரணி ஜாகீரும் ஆற்காட்டின் தெற்கிலிருந்து வட பகுதிக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டது. சத்தியவேடு தாலுகாவும் பழவேற்காடு பகுதியும் செங்கற்பட்டிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டன. பிறகு இந்த ஜில்லா (1) சித்தூர் (2) திருப்பதி (3) கடப்பநத்தம் (4) சாத்கூர் (5) திருவலம் (6) காவேரிப்பாக்கம் (7) சோளிங்கபுரம் (8) ஆற்காடு (9)வேலூர் (10) திருப்பத்தூர் (11) போளூர் (12) வந்தவாசி (13) ஸத்தியவேடு (14) சித்தூர் பாளையம் (15) மாமண்டூர் (16) கிருஷ்ணாபுரம் (17) கரகம்பாடி, (18) ஆரணி, ஆவல்கொண்டா, தேசூர் ஜமீன்தாரிகள் (19) காளஹஸ்தி, கார்வேட்நகரம், கங்குந்தி ஜமீன்தாரிகளென பிரிக்கப்பட்டிருந்தன. பின்னர் 1911-ஆம் வருஷத்தில் இவை சித்தூர், வட ஆற்காடு இரண்டு ஜில்லாக்களாகப் பிரிக்கப்பட்டன.

பழவேற்காடு 1818-ஆவது வருஷத்தில் கம்பெனிக்காரர்களால் டச்சுக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டபோதிலும் மறுபடியும் அவர்களுக்கே திருப்பித் தரப்பட்டுப் பின்னர் செங்கற்பட்டு ஜில்லாவுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டது. 1824-ஆவது வருஷத்தில் வட ஆற்காட்டுக்குத் திருப்பப்பட்டு 1850-ஆவது வருஷத்தில் சத்தியவேடு தாலுகாவின் ஒரு பாகத்துடன் திரும்பவும் செங்கற்பட்டுக்கே மாற்றி விடப்பட்டது. சத்தியவேட்டின் பாகமும் அதே ஜில்லாவுக்கு 1860-ஆவது வருஷத்தில் தாலுகாக்கள் ஒழுங்கு செய்யப்பட்டபொழுது சேர்த்துக் கொள்ளப்பட்டது. இதற்கு முன் புங்கனூர் ஜமீன்தாரியும் 1856-ஆவது வருஷத்-