பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

வட ஆற்காடு ஜில்லா

நீர்ஓட்டம் தெற்குப் பக்கமாக ஏற்பட்டிருப்பதுடன் அது பாலாற்றில் வந்து கலக்கிறது. மேற்கு பீடபூமியின் ஜலமும் தெற்குப் பக்கத்தில் தான் செல்கிறது. தெற்குத் தாலூகாக்கள் சிறுகச் சிறுக சமுத்திரத்தின் பக்கம் சரிந்து சென்றிருப்பதால் அதிலுள்ள நதிகள் அப்பக்கமே ஓடி சமுத்திரத்தில் விழுகின்றன.

இந்த ஜில்லாவின் முக்கியமான நதிகள் (1) பாலாறு (2) செய்யாறு (3) கோட்டாறு (4) கௌண்டின்ய நதி (5) புண்ணியதீர்த்த நதி முதலியன.

இந்நதிகளுள் முக்கியமானது பாலாறு. அது இந்த ஜில்லாவை அனேகமாய் இரண்டு சம பாகங்களாகப் பிரிக்கிறது. அது மைசூரில் நந்திதுர்க்கத்திற்கருகில் பெண்ணாறு உற்பத்தியாகு மிடத்திற்குப் பக்கத்திலேயே உற்பத்தியாகிறது. உற்பத்தியான இடத்திற்கு ஐம்பது மைல் தூரத்தில் இந்நதி கங்குந்தி ஜமீன்தாரியில் இந்த வட ஆற்காடு ஜில்லாவில் பிரவேசிக்கிறது. இன்னும் முப்பது மைல் சென்றதும் கிழக்குத் தொடர்ச்சியிலுள்ள இடை வெளிககளின் வழியாக வாணியம்பாடி பள்ளத்தாக்கில் விழுகிறது.

வசிட்ட மகரிஷி நந்தி மலையில் தவம் செய்துகொண்டிருக்கையில் அவருக்கு உதவிசெய்து கொண்டிருந்த காமதேனுவின் விருப்பத்தைப் பூர்த்திசெய்து வைக்கவேண்டி ஒரு தருப்பையை மந்திரித்துவிட அது இளங்கன்றாக மாறி விட உடனே காமதேனு அவ்விளங்கன்றினுக்குப் பால் கொடுக்க வேண்டித் தனது மூலைப்பாலை அம் மலையில் சொரிய அது ஒரு புண்ணிய நதியாய்ப் பெருகிப் பாலாறு என்னும் பெயரோடு சென்றதையும், பின்னர் இப்பாலாறு